India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2 ஆண்டுகளுக்கு முன் கோமாவில் இருந்த மாணவர் CBSE +2 தேர்வில் 93% மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த மாதவ், 2021இல் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் கோமாவுக்கு சென்றார். அவரது மூளையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டு பேச்சு, புரிதல், எழுத்து போன்ற முக்கிய செயல்பாடுகள் முடங்கின. இந்நிலையில், அறுவைச் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அவர், +2 தேர்வில் சாதித்துள்ளார்.
சென்னையில் இருந்து நெல்லை சென்ற அரசுப் பேருந்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீசார் பேருந்து ஓட்டுநர், நடத்துனரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் துப்பாக்கி கைப்பற்றப்பட்டதால், தீவிரவாத பின்னணி ஏதும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சை, விருதுநகர், கடலூர், சேலம், நெல்லை, குமரி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்ததாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
எவரெஸ்ட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் மசாலா பொருள்களின் தரம் குறித்து ஆய்வுசெய்து வருவதாக நியூசிலாந்தின் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அந்த மசாலா பொருள்களில், புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாகக் கூறி, ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகள் தடை விதித்தன. தற்போதைய நிலையில், அப்பொருள்களின் தரம் குறித்து அமெரிக்க அரசு ஆய்வுசெய்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஐபிஎல்லில் அறிமுகம் செய்யப்பட்ட ‘இம்பேக்ட் வீரர்’ விதி நன்றாக இருப்பதாக, ராஜஸ்தான் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இது ஒரு நல்ல விதி என்று தான் நினைப்பதாகவும், கடந்த ஆண்டு ஐபிஎல்லில் தாங்கள் நிறைய இறுக்கமான முடிவைப் பெற்றோம் என்பதை அனைவரும் பார்த்தனர் என்றும் கூறினார். மேலும், இந்த விதி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில், சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணனின் மனைவியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட முயன்றுள்ளனர். தங்களுடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி, மோசடி செய்ய முயன்றதாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாஜகவின் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், எதிர்க்கட்சி வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து நிறுத்துவதாக காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவின் பெண் வேட்பாளர், வாக்குச்சாவடியில் பர்தாவைக் கழற்றி பெண்களின் அடையாளத்தைச் சரிபார்த்ததை குறிப்பிட்டு, நாட்டில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும்தான் தேர்தல் நடைபெறுகிறதா என அவர் கேள்வி எழுப்பினார்.
‘தக் லைஃப்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, சென்னையில் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. டெல்லி மற்றும் ஜெய்சல்மரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்ததாகவும், 30 நாள்கள் நடைபெற்ற இப்படப்பிடிப்பில் நடிகர் சிம்பு இடைவெளி இன்றி நடித்ததாகவும் கூறப்படுகிறது. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருவதால், படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனங்களை ஓட்டும்போது செய்யக்கூடிய அபாயகரமான விஷயங்களில் ஒன்று ஃபோன் பயன்படுத்துவது. அதிலும், வாகனத்தை ஓட்டிக்கொண்டே மெசேஜ் செய்வது மனநோயாளியின் நடத்தையுடன் தொடர்புடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள 1,000 ஓட்டுநர்களிடம் நடத்திய ஆய்வில், சுமார் 600 பேர் வாகனம் ஓட்டும்போது ஃபோனை பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய அணிக்காக இன்னும் சில வருடங்கள் விளையாட விரும்புவதாக ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்திய அணியை வழிநடத்துவது என்பது மிகப்பெரிய கௌரவம் என்றும், தான் இந்த பொறுப்பிற்கு வருவேன் என்று ஒருநாளும் யோசித்தது கூட கிடையாது என்றும் கூறினார். மேலும், கேப்டனாக பொறுப்பேற்ற பின், அனைவரும் ஒரே திசையில் ஓட விரும்பியதாகவும், அது தான் சரியாக இருக்குமென்றும் அவர் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.