News April 12, 2024

மிகப்பெரிய புதுபிக்கத்தக்க எரிசக்தி மையம் எது தெரியுமா?

image

உலகிலேயே மிகப்பெரிய புதுப்பிக்க எரிசக்தி உற்பத்தி மையம், குஜராத்தின் காவ்டா பகுதியில் உள்ளது. அதானி குழுமம் சார்பில் சூரிய மின்சக்தி மையம், காற்றாலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையம் 538 சதுர கிலோ மீட்டருக்கும் கூடுதலான நிலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீசுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு பெரிதாகும். தற்போது அங்கு 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

News April 12, 2024

டோக்கன் கொடுத்து வென்றவர் தினகரன்

image

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் டோக்கன் கொடுத்து ஏமாற்றி வென்றவர் டிடிவி தினகரன் என்று சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தினகரன் தந்த டோக்கனை கையில் வைத்துக்கொண்டு மக்கள் காத்திருக்கின்றனர். தேனி மக்கள் அவரை நம்ப வேண்டாம் எனக் கூறினார்.

News April 12, 2024

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு..?

image

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில், ஜூன் மாதத்தில் அதிக வெப்ப அலை வீசும் என்பதால், மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News April 12, 2024

சேர நாட்டில் ராகுல்; பாண்டிய நாட்டில் அமித்ஷா

image

தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாள்களே இருக்கும் நிலையில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் & பாஜகவின் தலைவர்கள் தமிழகம் நோக்கி படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவர் அமித்ஷா பண்டைய பாண்டிய தலைநகரான மதுரையிலும், காங்கிரஸின் ராகுல் காந்தி சேர நிலமான கோவையிலும் இன்று மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளனர். ஜனநாயகப் போரில் யார் வெல்வார்கள் என ஜுன் 4ஆம் தேதி தெரியும்.

News April 12, 2024

வெற்றிகரமான பந்துவீச்சிற்கு இவைதாம் காரணம்

image

RCB அணிக்கு எதிரான லீக் போட்டியில், 5 விக்கெட்டுகள் எடுத்து MI அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் ஜஸ்பிரித் பும்ரா. ஆட்டநாயகன் விருது பெற்ற பின்பு பேசிய அவர், “எப்போதும் வித்தியாசமாக பந்து வீச பயிற்சி எடுப்பது, பேட்ஸ்மேன்களின் பலவீனத்தை அலசுவது, ஈகோ பார்க்காமல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பந்து வீசுவது ஆகியவைதான் என்னுடைய வெற்றிகரமான பவுலிங்கிற்கு காரணம்” என்றார்.

News April 12, 2024

வெப்ப அலை: பிரதமர் மோடி உத்தரவு

image

ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் எச்சரித்ததை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று இரவு ஆலோசனை நடத்தினார். அதில், வெப்ப அலையை சமாளிக்க மத்திய – மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட வேண்டும். அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், குளுகோஸ், குடிநீர் விநியோகம் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News April 12, 2024

RCB ரசிகர்கள் வருத்தம்

image

பெங்களூரு அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளதால், ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும், பந்துவீச்சில் சொதப்பியது. இதனால் தோல்வி அடைந்த பெங்களூரு அணி, 2 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. நடந்து முடிந்த 6 போட்டிகளில் 5இல் தோல்வி அடைந்துள்ள RCB அணி, பிளே-ஆப் வாய்ப்பை தவறவிடவும் வாய்ப்புள்ளது.

News April 12, 2024

நடிகையின் உணவை திருடி சாப்பிடும் கணவர்

image

நடிகை அமலாபால் தனது உணவுகளை கணவர் திருடி சாப்பிடுவதாக நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். எல்.விஜய்யை விவாகரத்து செய்தபிறகு, நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக அமலாபால் திருமணம் செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமது உணவை முன்பு சகோதரர் திருடி சாப்பிடுவார் என்றும், தற்போது கணவர் திருடி சாப்பிடுகிறார் என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

News April 12, 2024

மனைவி, 7 குழந்தைகளை கொன்ற கணவன்

image

பண நெருக்கடி காரணமாக மனைவி மற்றும் 7 குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜத் கோகர், போதிய வருமானம் இல்லாததால் மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர், தனது மனைவி (கவுசர்), 8 முதல் 10 வயதுடைய 4 மகள்கள், 3 மகன்களை கோடரியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

News April 12, 2024

BIG BREAKING: நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் கைது

image

நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேரை, மேற்குவங்கத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். குண்டுவெடிப்புக்கு முன்பு இருவரும் சென்னையில் ஒரு மாதம் தங்கியுள்ளனர். குண்டுவெடிப்புக்கு பின் கர்நாடகாவிலிருந்து கேரளா சென்று, அங்கிருந்து தமிழகம் வழியாக ஆந்திரா சென்று தலைமறைவான நிலையில், உளவுத்துறை உதவியுடன் என்ஐஏ கைது செய்துள்ளது.

error: Content is protected !!