News May 17, 2024
இந்திய மசாலா பொருள்களுக்கு நேபாள் அரசு தடை

எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில், புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாகக் கூறி அவற்றை விற்பனை செய்யக் கூடாதென்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத் தொடர்ந்து இந்திய நிறுவனங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News February 7, 2026
ராம்நாடு: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
News February 7, 2026
நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது.. அடுத்தடுத்து அதிர்ச்சி

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அடுத்தடுத்து பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு பல கோடி ரூபாய்க்கு அவர் போதைப்பொருள் விற்றது தெரியவந்துள்ளது. சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் அஞ்சுவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்த போலீஸ், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது.
News February 7, 2026
TOSS: இந்திய அணி பேட்டிங்

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் கத்துக்குட்டி அணியான USA-ஐ இந்திய அணி எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் அபிஷேக், இஷான் கிஷன், சூர்யகுமார், திலக், ஹர்திக், துபே, ரிங்கு, அக்ஷர், அர்ஷ்தீப், வருண், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


