India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா தேசத்துக்கான பணியில் இணைந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இரண்டு மாதங்களாக அணியணியாக பிரிந்து ஐபிஎல் விளையாடிய வீரர்கள், தற்போது ஒன்றிணைந்து உலகக் கோப்பை தொடரில் விளையாடச் சென்றிருக்கின்றனர். அதேநேரம், மனைவியின் பிரிவு தொடர்பான சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஹர்திக், உற்சாகத்துடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
₹100க்கும் குறைவான யுபிஐ பரிவர்த்தனைக்கு இனி எஸ்எம்எஸ் அனுப்பப்படாது, மின்னஞ்சலே அனுப்பப்படும் என்று HDFC வங்கி அறிவித்துள்ளது. பரிவர்த்தனை குறித்த எஸ்எம்எஸ் அனுப்ப வங்கிகளுக்கு ₹0.01 முதல் ₹0.03 வரை செலவாகிறது. இதுபோல நாளொன்றுக்கு அனுப்பப்படும் 40 கோடி எஸ்எம்எஸ்களுக்கு சில கோடி ரூபாய்களை வங்கிகள் செலவிடுகின்றன. இந்த செலவினத்தை குறைக்க HDFC வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்று ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குப் பின்னரும் காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்துள்ளது. இதற்கான தனியார் ஆய்வாளர்களையும் அக்கட்சி களமிறக்கியிருந்தது. இதனையடுத்து, I.N.D.I.A கூட்டணி 280 முதல் 290 தொகுதிகளை வெல்லும் என்று அவர்கள் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்களாம். அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் கூட்டணிக் கட்சிகளை ஜூன் 1ஆம் தேதி அழைத்திருக்கிறது காங்கிரஸ்.
பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரான பல்கர் சிங்கிடம் இளம்பெண் ஒருவர் வேலைவாய்ப்பு கேட்டுள்ளார். பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய அமைச்சர், ஆடைகளை களைந்தால் வேலை தருவதாகக் கூறி, ஆபாசமாக சைகை செய்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி பஞ்சாப் டிஜிபியை தேசிய மகளிர் ஆணையம், பாஜக ஆகியவை வலியுறுத்தியுள்ளன.
ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இவ்வழக்கில் பணத்தை எடுத்துச்சென்றவர்கள் நயினார் நாகேந்திரனின் எம்எல்ஏ கோட்டா டிக்கெட்டில் பயணித்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம் உட்பட 4 பேர் மே 31இல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் 2ஆம் தேதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கேரளாவில் ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஜூன் 2ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று நாளையும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவை இந்துத் தலைவர் என அண்ணாமலை கூறி வருவதற்கு மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தொடர்ந்து அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். அண்ணாமலை திமுகவின் பி டீம், அரைவேக்காடு, பக்குவமில்லாதவர் எனவும், திமுகவும், அண்ணாமலையும் அதிமுகவுக்கு எதிராக சதி தீட்டியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தூத்துக்குடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த ஒரே ஒரு முதியவரும் உயிரிழந்தார். தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பொய்த்துப் போனதன் காரணமாக இந்த ஊர் மக்கள் வெளியேறி விட்டனர். மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் கந்தசாமி(75) மட்டும் கிராமத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே தங்கியிருந்தார். தற்போது அந்த கிராமத்தின் கடைசி நம்பிக்கையும் மூச்சை நிறுத்திக் கொண்டது.
தமிழக அரசு கலை கல்லூரிகளிலேயே மிகவும் அதிகபட்சமாக சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 1,140 இடங்களுக்கு 1.34 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒரு சீட்டுக்கு 120 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டில் 1.20 லட்சம் விண்ணப்பம் வந்த நிலையில், இந்தாண்டில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் 53,171 பேர் பெண்கள், 43 பேர் திருநங்கைகள். கடந்தாண்டை விட மாணவிகளின் எண்ணிக்கை 10,000 கூடியுள்ளது.
ஒட்டன்சத்திரம் மொத்த காய்கறி சந்தையில் எலுமிச்சை பழத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று கிலோ ₹180க்கு விற்ற எலுமிச்சை, ஒரே நாளில் ₹100 சரிந்து ₹80க்கு விற்பனை ஆவதால், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர். கோடை வெப்பம் குறைந்திருப்பதாலும், கேரளாவில் கனமழையால் வியாபாரிகள் வராததாலும் எலுமிச்சையின் விலை குறைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.