India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டியில், விராட் கோலி பங்கேற்பது சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான வீரர்கள், கடந்த வாரமே நியூயார்க் சென்று பயிற்சியைத் தொடங்கினர். ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சற்று தாமதமாக அணியில் இணைந்தாலும், விராட் கோலி நேற்று தான் மும்பையில் இருந்தே புறப்பட்டார். இதனால், நாளைய போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
ADSP வெள்ளத்துரை இடைநீக்கத்தை நிறுத்தி வைப்பதாக உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். 2013இல் சிவகங்கையில் பணியிலிருந்த போது நடந்த காவல் நிலைய மரணத்தில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, இன்று அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இன்றுடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. தற்போது, திடீரென அந்த இடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விதார்த் நடித்துள்ள ‘அஞ்சாமை’ திரைப்படம், வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எஸ்.பி.சுப்புராமன் எழுதி, இயக்கும் இந்தப் படத்தில், வாணி போஜன், ரஹ்மான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில், நீட் தேர்வு, அதன் பாதிப்புகள், கோச்சிங் சென்டர்களின் ஆதிக்கம் குறித்து அழுத்தமாக பேசப்பட்டுள்ளது.
அரசு நிலத்தில் உள்ள வழிபாட்டு தலங்களை 6 மாதத்திற்குள் அகற்ற கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடம் இல்லாத ஏழைகளுக்கு அந்த இடங்களை வழங்கினால், கடவுளே மகிழ்ச்சி அடைவார் என தெரிவித்த நீதிபதி குன்னி கிருஷ்ணன், தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுளுக்கு அரசு நிலத்தை, அபகரித்து கட்டடம் கட்ட வேண்டியதில்லை என்றார். கடவுளின் பெயரால் ஆக்கிரமிப்புக்கள் செய்யப்படுவதை ஏற்க முடியாது எனவும் கூறினார்.
ரேஷன் அட்டைதாரர்கள், மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் பெறலாம் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், 82.82 லட்சம் அட்டைகளுக்கு தலா ஒரு கிலோ து.பருப்பு, 75.87 லட்சம் அட்டைகளுக்கு தலா ஒரு லிட்டர் பாமாயில் வழங்குவதற்காக, பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால், மே மாதம் பருப்பு, பாமாயில் வாங்காதவர்கள் ஜூன் மாதத்தில் தடையின்றி பெறலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வெறுப்பு அரசியலை விதைக்கும் மோடி, விவேகானந்தரை போல் நற்பெயரை பெற முடியாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜகவை போல் INDIA கூட்டணியும் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அவர், யார் பிரதமராக வேண்டும் என்பதை கூட்டணி கட்சிகள் கலந்து பேசி முடிவு செய்யும் என்றார். சாதி, மத மோதல் பேச்சை பரப்புரையில் பேசும் மோடி, தியானம் இருந்தும் பயனில்லை என்றும் விமர்சித்தார்.
ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பாகவும், வீரர்களை தக்க வைப்பது தொடர்பாகவும் பிசிசிஐ சில முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியும் 3 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்றும், ஒரு வீரரை மட்டும் ‘ரைட் டூ மேட்ச்’ (RTM) கார்டை பயன்படுத்தி வேறு அணி ஏலத்தில் வாங்கிய பின் அதே தொகைக்கு தங்கள் அணிக்கு திரும்ப வாங்கலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வார விடுமுறையில் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் சூழலில், ஆம்னிப் பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண நாளில் ₹500-₹1000 வரை இருக்கும் டிக்கெட் விலை, வார இறுதியில் ₹1000-₹2000 வரை உயர்ந்துவிடுகிறது. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் அவதிப்படும் சூழலில், அனைத்து நாள்களும் ஆம்னி பேருந்தின் டிக்கெட் விலையை ஒரே மாதிரி நிர்ணயிக்க அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.
காங்கிரஸ் தனியாக 128 இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 3ஆவது முறையாக பாஜக ஆட்சியமைக்க முயல்வதை, INDIA கூட்டணி தடுத்து நிறுத்தும் என்று கூறிய அவர், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். கடந்த 2014இல் 44, 2019இல் 52 இடங்களில் காங்கிரஸ் வென்றது. இருமுறையும் பாஜக முழு மெஜாரிட்டி பெற்றது.
தாய்ப்பாலை வணிக ரீதியில் விற்பது குற்றம் என்று இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் எச்சரித்துள்ளது. சென்னை மாதவரத்தில், 50 மில்லி தாய்ப்பால் ₹500க்கு விற்கப்பட்ட சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தாய்ப்பால், தாய்ப்பாலில் தயாரித்த பொருட்களை விற்கக் கூடாது எனக் கூறியுள்ள உணவு பாதுகாப்பு ஆணையம், சட்ட விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.