News May 31, 2024
மோடி ஒருபோதும் விவேகானந்தராக முடியாது

வெறுப்பு அரசியலை விதைக்கும் மோடி, விவேகானந்தரை போல் நற்பெயரை பெற முடியாது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். பாஜகவை போல் INDIA கூட்டணியும் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற அவர், யார் பிரதமராக வேண்டும் என்பதை கூட்டணி கட்சிகள் கலந்து பேசி முடிவு செய்யும் என்றார். சாதி, மத மோதல் பேச்சை பரப்புரையில் பேசும் மோடி, தியானம் இருந்தும் பயனில்லை என்றும் விமர்சித்தார்.
Similar News
News July 8, 2025
இபிஎஸ், செங்கோட்டையன் இடையே மீண்டும் மோதலா?

2026 தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார் இபிஎஸ். கோவையில் பரப்புரையை தொடங்கியபோது, அவருடன் செங்கோட்டையன் இல்லாததது பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, அந்த பிரச்னை சுமுகமாக முடிந்தது. இந்நிலையில், மீண்டும் பனிப்போர் தொடங்கிவிட்டதாக பேசப்படுகிறது. அதேநேரத்தில், ஈரோட்டுக்கு இபிஎஸ் பரப்புரைக்கு செல்லும்போது, செங்கோட்டையன் உடனிருப்பார் என சொல்லப்படுகிறது. எது உண்மையோ?
News July 8, 2025
தமிழ் சினிமாவில் மமிதா பைஜுவின் ஆதிக்கம்

‘பிரேமலு’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான மமிதா தற்போது தமிழில் முக்கிய நடிகையாக மாறியுள்ளார். விஜய் தொடங்கி தனுஷ் வரை முக்கிய ஹீரோக்களின் படத்தில் ஃபர்ஸ்ட் புக் செய்யப்படும் நடிகை மமிதா தான். விஜய்யின் ‘ஜனநாயகன்’, சூர்யாவின் 46-வது படம், பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’, விஷ்ணு விஷாலின் ‘இரண்டாம் வானம்’, தனுஷின் புதிய படம் உள்ளிட்ட 5 முக்கிய நடிகர்களின் படங்களில் மமிதா நடிக்கிறார்.
News July 8, 2025
இந்த பெண்ணுக்கு 16-ம் தேதி தூக்கு தண்டனை

ஏமன் சிறையில் இருக்கும் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, இந்த மாதம் 16-ம் தேதி தூக்கிலிட இருப்பது இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017-ல் தலால் அப்தோ மெஹ்தி என்பவரை கொலை செய்ததாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் உறுதியானதால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. நிமிஷாவின் தண்டனையை குறைக்க அவரது தாயார் போராடி வந்தார். எனினும் தூக்கிலிடப்படும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.