India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
PBKS-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், MI வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடி காட்டியுள்ளார். வித்தியாசமான ஷாட்டுகளால் ரசிகர்களை கவர்ந்த அவர், 7 Four, 3 Six என விளாசி அசத்தினார். ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்து, அணியின் ஸ்கோரை உயர்த்தியதோடு தனது 23ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். காயத்தில் இருந்து மீண்ட அவர் தற்போது பிரமாதமாக விளையாடி வருவதால், உலகக் கோப்பையில் நிச்சயம் இடம்பெறுவார் என தெரிகிறது.
தமிழ்நாட்டில் காலையில் இருந்து வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 102 வயது மூதாட்டி சின்னம்மா, தடியை ஊன்றிக்கொண்டு வந்து தனது ஜனநாயகக் கடமையாற்றினார். இன்றைய இளைஞர்களும், முதல் வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்பதற்கு மூதாட்டியின் செயல் முன்னுதாரணமாக மாறியுள்ளது.
புதுச்சேரியில் தேர்தல் தொடங்கிய 1 மணி நேரத்தில் 12% வாக்குப்பதிவாகியுள்ளது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் உள்பட 102 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்கிய நிலையில், வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் தொடங்கிய 1 மணி நேரத்தில் 12% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் தயவு செய்து ஓட்டுப் போட வேண்டுமென்று நடிகர் பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து பிரபு தனது வாக்கைப் பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேர்தலில் வாக்களிப்பது அனைவரின் ஜனநாயகக் கடமை என்றும், அதனால் தயவு செய்து அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடலூர், திருச்சி ஸ்ரீரங்கம், நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, விழுப்புரம், திருப்பூர், குமரி என பல்வேறு இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. விவிபேட் இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இயந்திரக் கோளாறை சரி செய்யும் பணியிலும், மாற்று வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. CSK – LSG அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள நிலையில், “காலையில் ஓட்டு போடுங்க, மாலையில் விசில் போடுங்க” என எழுதிய பேனர்கள் சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்தவகையில், திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், நாகையில் சிபிஎம் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோரும், தேனியில் தங்க தமிழ்செல்வன், தருமபுரியில் சவுமியா அன்புமணி, சென்னையில் தமிழிசை, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய வேட்பாளர்களும் காலையிலேயே தங்களது வாக்குகளை செலுத்தினார்.
நடிகர் ரஜினி எப்போதும் வாக்கு செலுத்தும் மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 5 நிமிடங்கள் மேல் வாக்குபதிவு நிறுத்தப்பட்டதால், நடிகர் கௌதம் கார்த்திக், பொதுமக்கள் காத்திருக்கின்றனர். வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்கட்டத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் பெருவாரியாக திரண்டு வந்து வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். X-இல் அவர் வெளியிட்டுள்ள பதிவில், வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில் சாதனை அளவாக அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டுமென்றும், இளம் வாக்காளர்கள், முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், திண்டுக்கல் 18வது வார்டு மற்றும் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகரில் வாக்கு இயந்திரம் செயல்படவில்லை. இதனால், அங்கு சற்றுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாக்கு செலுத்த ஆவலுடன் வந்த மக்கள், நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.