India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1792ஆம் ஆண்டில் நடந்த ஸ்ரீரங்கப்பட்டினம் போரில் ராக்கெட்டுகளை வீசி திப்புசுல்தானின் படையினர் தாக்குதல் நடத்தினர். இதுவே உலகின் முதல் ஏவுகணையாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது பயன்படுத்தப்படும் நவீன கால ஏவுகணை, 2ஆம் உலக போரில் நாஜிக்கள் ஆட்சியின்போது ஜெர்மனி கண்டுபிடித்தது. V1, V2 ஏவுகணைகளை உருவாக்கி, இங்கிலாந்து மீது ஜெர்மனி படை தாக்குதல் நடத்தியது.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 அதிகரித்து ₹54,040க்கும், கிராமுக்கு ₹45 உயர்ந்து ₹6,755க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹2 உயர்ந்து ₹88க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹88,000க்கும் விற்பனையாகிறது.
காஷ்மீர் குறித்து ஈரான்-பாகிஸ்தான் கூட்டறிக்கையில் கருத்து தெரிவிக்கப்பட்டதற்கு ஈரானிடம் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. ஈரான் அதிபர் பாகிஸ்தானுக்கு அண்மையில் சுற்றுப்பயணம் செய்தபோது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் காஷ்மீர் பிரச்னைக்கு அப்பகுதி மக்கள் விருப்பப்படியும், சர்வதேச சட்டப்படியும் அமைதி வழியில் தீர்வு காண வலியுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு ஈரானிடம் இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர். தமிழகத்தில் இந்த முறை திராவிடக் கட்சிகளின் ஊழலுக்கும் குடும்ப அரசியலுக்கும் மாற்றாக பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியை மக்கள் பார்த்தனர்” என்று கூறினார்.
மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் அனைவரும் சாதனை எண்ணிக்கையில் பங்கேற்க கேட்டுக்கொள்வதாக கூறிய அவர், அதிக வாக்குப்பதிவு நமது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்றும், உங்கள் வாக்கு, உங்கள் குரல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் முதல்முறையாக சூரியசக்தி மூலம் 5,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து எரிசக்தி துறை புதிய சாதனை படைத்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மின் தேவையும் அதிகரித்து வருகிறது. நமது மொத்த தேவையில் சூரியசக்தி மின்சாரம் 10% மின்சார தேவையை பூர்த்தி செய்கிறது. இதையொட்டி, வீடுகளில் சூரியசக்தி தகடுகளை பொருத்த அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான மானியங்களும் அரசால் வழங்கப்படுகிறது.
நடிகர் அஜித்தின் 53ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் மே 1ஆம் தேதி அவரது திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன. அதன்படி, அஜித்தின் ‘காதல் மன்னன்’, ‘பில்லா’, ‘மங்காத்தா’ ஆகிய 3 வெற்றிப் படங்களும், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளன. ரீ ரிலீஸ் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இது அஜித் ரசிகர்களுக்கு திருவிழாவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அராஜகத்தை தட்டிக் கேட்ட பாஜகவினரை திமுக அரசு மிரட்டுகிறது என்று தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “தேனாம்பேட்டை 13வது வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். அப்போது அதை தடுக்க முயன்ற பாஜக ஏஜென்ட் கவுதமை தாக்கியுள்ளனர். அத்துடன் குடிநீர் வாரிய அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பி அச்சுறுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தலுக்கு பாஜக பயப்படாது” என்றார்.
ஹைதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்த RCB அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி (10ஆவது) இடத்தில் இருந்தது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 4 புள்ளிகளுடன் கடைசி இடத்திலேயே தொடர்கிறது RCB அணி. மேலும், எஞ்சி இருக்கும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் மே மாதம் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மே மாதம் முதல் 2 வாரங்களில் ஈரோடு, சேலம், தருமபுரி, கோவை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு குமரி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.