India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை பார்வதி, வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவும், மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகவும் வாக்களியுங்கள் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணிக்கும் மாறாமல், ஒரே அணிக்காக விளையாடிய வீரர்கள் (குறைந்தது 70 போட்டிகளில்):
▶விராட் கோலி (பெங்களூரு) – 246 ▶கிரண் பொல்லார்டு (மும்பை) – 189 ▶சுனில் நரைன் (கொல்கத்தா) – 169 ▶ஜஸ்பிரித் பும்ரா (மும்பை) – 128 ▶லசித் மலிங்கா (மும்பை) – 122 ▶ரிஷப் பண்ட் (டெல்லி கேப்டன்) – 107 ▶பத்ரிநாத் (சென்னை) – 95 போட்டிகளில் விளையாடியுள்ளனர்.
அரசுப்பேருந்தில் இருந்து இருக்கையுடன் நடத்துநர் வெளியே விழுந்த சம்பவம் தமிழக பேருந்துகளின் நிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.15 ஆண்டுகளுக்கு மேலான பேருந்துகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறித் தமிழகத்தில் 1,500 பஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் நிலையை எளிதாக நினைக்காமல், 2 கோடிப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்புடைய பிரச்னையாகக் கருதிப் போக்குவரத்துத்துறை கவனம் செலுத்த வேண்டும்.
வாக்காளர் பெயர் நீக்கம் தொடர்பாக அண்ணாமலை ஏன் முன்பே தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கவில்லை என்று செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற மாட்டார் என்ற காரணத்தால், இந்த மாதிரியான புகார்களை தெரிவிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, வாக்குப்பதிவு முடிந்த பிறகு பேசிய அண்ணாமலை, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
கர்நாடகாவில் 14 தொகுதிகளில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்படி, நேற்றிரவு நடந்த சோதனையில் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் சுதாகருக்கு சொந்தமான இடத்தில் ₹4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனைக் கட்டையால் அடித்துக் கொன்று வீட்டுக்கு பின்புறம் வீசிய பெற்றோர் கைது செய்யப்பட்டனர். வெங்கடேஷ் பிரசாத் என்பவர் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். ஆத்திரமடைந்த பெற்றோரும், சகோதரரும் அடித்துக் கொலை செய்து, விவசாய நிலத்தில் சடலத்தை வீசியுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.
சங்கம்விடுதியில் உள்ள மக்களுக்கு கந்தர்வக் கோட்டையில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக சாணம் கலக்கப்பட்ட குறிப்பிட்ட நீர்த் தொட்டிக்கு சீல் வைத்த அதிகாரிகள், அதிலிருந்து நீர் மாதிரியையும் தடயங்களையும் எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறிய அவர், 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். கிராமப்புறங்களில் சிலிண்டர் பயன்படுத்தாதவர்களுக்கு மட்டும் அரை லிட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என்றும் நகர்ப்புறங்களில் அதுவும் கிடையாது எனவும் கூறினார்.
தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “பள்ளிகளிலும், தலித் மக்கள் வாழும் பகுதிகளிலும் வன்கொடுமைகள் தொடர்வது மிகுந்த கவலையை அளிக்கிறது. சங்கம்விடுதி ஊராட்சி நீர்த்தொட்டியில் சாணத்தைக் கலந்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை அரசு பெற்றுத்தர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் அருகே மதுபோதையில் பெண் VAO வயிற்றில் எட்டி உதைத்த திமுக மாவட்ட கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். ஆ.கூடலூர் VAO சாந்தி, 19ஆம் தேதி வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகளுக்கு உணவு வழங்கியபோது, கவுன்சிலர் ராஜீவ்காந்தி, அவரை கன்னத்தில் அறைந்து திட்டியுள்ளார். பிறகு மது அருந்திவிட்டு வந்து வயிற்றில் உதைத்துள்ளார். புகாரின்பேரில் தலைமறைவாக இருந்த ராஜீவ்காந்தியை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.