News June 7, 2024
பள்ளித் திறப்பு நாளில் மாணவர்களுக்கு பொங்கல்

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10ஆம் தேதி ( திங்கள்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த தினத்தை முன்னிட்டு, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளான ஜூன் 10ம் தேதி அன்று அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என்று சமூக நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News July 8, 2025
இரவு 10 மணிக்கு என்ன நடக்கப் போகிறது?

இந்தியா- அமெரிக்கா இடையே நடந்துவரும் வர்த்தக பேச்சுவார்த்தை, இறுதிநிலையை எட்டியுள்ளது. இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 26%-ஆக உயர்த்திய டிரம்ப், அதற்கு கொடுத்த 90 நாள் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில், IND-USA இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு இரவு 10 மணிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதர 14 நாடுகளுக்கான வரி உயர்வு ஆக., 1 முதல் அமலுக்கு வரவுள்ளது.
News July 8, 2025
செயற்குழு தீர்மானங்கள் செல்லாது: அன்புமணி

ராமதாஸ் தலைமையிலான செயற்குழு தீர்மானங்கள் செல்லாது என அன்புமணி தலைமையிலான நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து ஜூலை 20-ல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாமகவின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் அன்புமணிக்கு மட்டுமே உண்டு எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
News July 8, 2025
திமுக 200+ தொகுதிகளில் வெல்ல வாய்ப்பில்லை: இபிஎஸ்

200+ தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். கோவையில் 2வது நாளாக பரப்புரை மேற்கொண்ட அவர், தாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவிற்கு என்னவென்று கேள்வி எழுப்பினார். திமுக கூட்டணியை மட்டுமே நம்பி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதிமுக மக்களை நம்பி இருப்பதாகத் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் பிரச்னை இல்லை என்றும் இபிஎஸ் குறிப்பிட்டார்.