India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் பதவியேற்பு விழாவை முன்னிட்டு குடியரசுத்தலைவர் மாளிகையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்தின் வெளிவட்டத்தில் (3வது வட்டம்) டெல்லி போலீஸ், 2வது வட்டத்தில் துணை ராணுவம், முதல் வட்டத்தில் NSG கமாண்டோ படை, SPG பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்காக 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டுத் தலைவர்களுக்கு துணை ராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய ரோடு சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை ஜோதி கதேரியா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் மகளிருக்கான ‘எலைட் டைம் டிரையல் சி2′ தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்து ஜோதி கதேரியா தங்கம் வென்றார். ஆடவர் எலைட் எச்2 பிரிவில்’ அர்ஷத் ஷேக்கும் ‘எச்4 பிரிவில்’ பிரஷாந்த் ஆர்கலும் தலா ஒரு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்திய பிரதமராக 3ஆவது முறை பதவியேற்கவுள்ள மோடிக்கு ஏன் பாகிஸ்தான் வாழ்த்து கூறவில்லை என அந்நாட்டு செய்தித் தொடர்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இந்தியாவில் அரசமைக்கும் பணி நடந்து வருவதாகவும், இந்த சூழலில் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பது சரியாக இருக்காது என கருதுவதாகவும் மழுப்பலாக பதிலளித்துள்ளார். தங்கள் நாட்டுத் தலைவரை தேர்வு செய்ய இந்திய மக்களுக்கு உரிமையுண்டு எனவும் கூறியுள்ளார்.
பூமியில் இருந்து 3 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘டி கொரோனே பொரியாலிஸ்’ என்ற விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு நட்சத்திரம், வரும் செப்டம்பர் மாதம் வெடித்து சிதறும் எனவும், அதை இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு எனவும், கடந்த 1946ஆம் ஆண்டு கடைசியாக வெடித்து சிதறியது எனவும் கூறியுள்ளனர்.
‘எமிஸ்’ இணையதளத்தில், பதிவான ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோரது மொபைல் எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க ‘எமிஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்யாதவர்களின் எண்களை குறிப்பிட்ட ஆசிரியர்கள் பள்ளி திறக்கும் நாளன்று கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியே ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. இதனை கீழ்காணும் நடைமுறைகளை பின்பற்றினால் சீராக பராமரிக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் *வைட்டமின் சி சத்துள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சையை உண்ண வேண்டும் * நீர்ச்சத்து குறையாமல் இருக்க நீர் ஆகாரங்களை அருந்த வேண்டும் * பழங்கள், காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும் * சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும்.
ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து பொதுச் சின்னத்தை ஒதுக்கக் கோரும் விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் வரவேற்பதாகக் கூறினார். கடைசியாக, கடந்த 2014ஆம் ஆண்டு, ஜம்மு & காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் அமையப் போகும் NDA கூட்டணி அரசு நீண்ட காலம் நீடிக்காது என சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அக்னிவீர் திட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றில் அவர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. அங்கே இருப்பவர் வாஜ்பாய் அல்ல, மோடி. அவர் யார் பேச்சையும் கேட்கமாட்டார் என்பதால் அரசு நீடிக்காது என தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணியை கொடூரமாக கொலை செய்து, உடலை கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவியின் உடலை கைப்பற்றிய போலீசார், கொலை செய்து கால்வாயில் வீசிச் சென்றவர்கள் யார் என்றும், குடும்பத் தகறாறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணமா என்பது குறித்தும் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
எஸ்.பி.வேலுமணிக்கும் தனக்கும் பிரச்னை என திட்டமிட்டு பொய் பரப்பி, குழப்பம் விளைவிக்க முயற்சி நடப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார். இதனால், பாஜக கூட்டணி தொடர்பாக இபிஎஸ் & வேலுமணி ஆகியோரிடையே இருவேறு கருத்துக்கள் நிலவுவதாக எழுந்த சர்ச்சை முற்றுப்பெற்றுள்ளது. பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் 30 தொகுதிகளில் வென்றிருக்கலாம் என வேலுமணி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.