India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
◆ரோஹித் தான் பெஸ்ட் IPL கேப்டன் என நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
சின்சினாட்டி (அமெரிக்கா) ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது
◆தீ விபத்தால் தள்ளிவைக்கப்பட்ட சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது
◆காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்தின் டாம் லாதம் விலகியுள்ளார்.
அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!
1945 ஆகஸ்ட் 6.. மனித இனத்தின் இருண்ட நாள். ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டது. பெரும் சத்தத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் சாம்பலாகின. இதில் உயிரிழந்தோரை விட, உயிரோடு இருந்தவர்களின் வேதனையே பெரிது. அந்த துயரமும், கொடூரமும் யாரும் மன்னிக்கவே முடியாத ஒரு மனிதப்பிழை. இந்த நாளில் மனதில் எழும் ஒரே கேள்வி, இந்த கொடுமையை பார்த்த பிறகும், உலகம் இன்னும் போருக்கு ஏன் ஆயத்தமாகவே இருக்கிறது?
அரசு நிதியோ, உதவியோ பெறாத நிறுவனம் என்பதால், திருத்தப்பட்ட விளையாட்டு மசோதாவில், – BCCI-க்கு, RTI சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. RTI சட்டம் அரசு நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அறிய உதவுகிறது. இதிலிருந்து BCCI விலக்கு பெற்றதால், இனிமேல், BCCI-ல் என்ன செய்கிறது, எவ்வளவு வருமானம், தேர்வு நடைமுறைகள் குறித்து அறிய முடியாது. Public game, private rules!
வட மாநிலத்தவரை TN-ல் வாக்காளர்களாக சேர்ப்பது தவறானது எனவும், இதுவும் ஒரு வகை ஊழல்தான் என்றும் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பேசிய அவர், உடுமலை SSI கொலை, கோவையில் போலீஸ் ஸ்டேஷனில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை என அடுத்தடுத்த சம்பவங்கள், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டுவதாக சாடினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
கவின் ஆணவப்படுகொலைக்கு, கண்டனம் மட்டுமல்ல இரங்கல் கூட விஜய் தெரிவிக்காதது சர்ச்சையானது. இந்நிலையில், கட்சி தொடங்கியதில் இருந்து தலித் மக்களின் பிரச்னைக்காக விஜய், ஒரு போராட்டம் நடத்தியது உண்டா என ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கவின் கொல்லப்பட்ட 3-வது நாள் திருமா நெல்லையில் இருந்தார். விஜய் எங்கே போனார்; வாய்கூட திறக்கவில்லை. பிறகு எப்படி தலித் வாக்குகள் அவருக்கு போகும் என சாடினார்.
கையில் காசே நிற்பதில்லையா? இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.
✦காட்சிப்படுத்துதல் மூலம், சூப்பர் மார்க்கெட்டில் தேவையில்லாத பொருள்கள் வாங்குவதை தவிர்க்கவும்.
✦சேமிப்பு போகத்தான், செலவு என்ற மன நிலைக்கு வாருங்கள்.
✦சோஷியல் மீடியாக்களை பார்த்து மயங்கி ஆடைகள், உணவுகள் உள்ளிட்டவற்றிற்கு பணத்தை செலவழிக்க வேண்டாம். ✦UPI-யை தவிர்த்து ஒரு பொருளை வாங்கும் போதும் கையில் பணம் வைத்து கொள்ளுங்கள்.
காலை எழுந்ததும் போனை கையில் எடுத்தபடி அமர்ந்திருக்காமல், இவற்றை செய்து பாருங்க.
★கொஞ்சம் நேரம் ஒரு புதிய விஷயத்தை புத்தகம் மூலம் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
★சிறிது நேரம் மென்மையான, மனதுக்கு பிடித்த இசையை கேளுங்கள்.
★வேக வேகமாக குளித்து விட்டு வெளியே ஓடிவராமல், சிறிது நேரம் குளிப்பதற்கு என ஒதுக்குங்கள்.
★இன்று என்ன செய்யப்போகிறோம் என ஒரு செக் லிஸ்ட் ஃபாலோ பண்ணுங்க. ட்ரை பண்ணி பாருங்க!
மறைந்த Ex CM கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்நிலையில், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்திற்கு தந்த நெருப்பு என CM ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கலைஞரின் ஒளியில், எல்லோர்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம் எனும் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் எனவும் உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார்.
➤இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், அட்லீயின் AD இயக்கும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
➤அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.
➤ராகவா லாரன்ஸ் தம்பி எல்வின் ஹீரோவாக நடித்துள்ள ‘புல்லட்’ படத்தின் டீசர் வரும் 8-ம் தேதி வெளியாகிறது.
➤சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான தர்ஷன் கணேசன் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.