News August 23, 2025

ஆகஸ்ட் 23: வரலாற்றில் இன்று

image

*1956 – திரைப்பட நடிகர் மோகன் பிறந்த தினம்.
*2011 – லிபியா உள்நாட்டுப் போர்: அதிபர் கடாஃபி அப்பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
*1991 – உலகின் முதல் இணையதளம்(WWW) பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது.
*2023 – சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் பிரக்யான் ரோவர் உதவியுடன் தரையிறங்கியது.
*அடிமைகள் ஒழிப்பு மற்றும் அதன் வணிகத்தையும் நினைவூட்டும் பன்னாட்டு நாள்.

News August 23, 2025

RSS-யிடம் விஜய் பாடம் படிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

image

ஒழுக்கமாக மாநாடு நடத்துவது குறித்து இந்து, RSS அமைப்புகளிடமும் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். TVK-ன் 2-வது மாநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற மாநாடு போல் இருந்ததாகவும் விமர்சித்தார். மேலும், வரும் தேர்தலில் 3 சதவீத வாக்குகளை மட்டுமே தவெக பெறும் என்றும், மநீம., போல் விரைவில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எனவும் தெரிவித்தார்.

News August 23, 2025

1.5 கோடி தொண்டர்கள் பிரிந்துள்ளனர்: வைத்திலிங்கம்

image

EPS-க்கு 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக சொல்கிறார், ஆனால் 80 லட்சம் வாக்குகள் தான் அதிமுகவுக்கு கிடைத்ததாக OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். உண்மையான தொண்டர்கள் 1.5 கோடி பேர் பிரிந்துக் கிடப்பதாகவும், அவர்களில் 99 சதவீதம் பேர் அதிமுக இணைய வேண்டும் என நினைப்பதாகவும் கூறினார். மேலும், அதிமுக ஒன்றிணைந்த பின் கூட்டணி அமைந்தால் அந்த அணி தேர்தலில் வெற்றிப் பெறும் என்றார்.

News August 23, 2025

ஓஷோவின் பொன்மொழிகள்

image

*பயம் முடிகிற இடத்தில் வாழ்க்கைத் தொடங்குகிறது.
*இயல்பாக இருங்கள், அற்புதத்திற்கு திட்டமிடுங்கள்.
*யாரோ ஒருவராகும் எண்ணத்தைக் கைவிடுங்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு தலைசிறந்த படைப்பு. விஷயம் என்னவெனில் இதை நீங்கள் உணர்ந்து, புரிந்து, ஏற்பது மட்டுமே.
*உங்களை தவிர யாராலும் உங்களை கோபப்படுவதும் முடியாது. மகிழ்ச்சியாக்கவும் முடியாது. *நட்சத்திரங்களை பார்க்க கொஞ்சமாவது இருள் தேவை.

News August 23, 2025

தவெகவின் 3-வது மாநாடு எங்கே? எப்போது?

image

தவெக முதல் மாநாடு விழுப்புரத்திலும், 2-வது மாநாடு மதுரையிலும் நடைபெற்ற நிலையில், 3-வது மாநாடு கோவையில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அதிமுக, திமுக, பாஜக செல்வாக்காக உள்ளதால் அதனை தகர்க்க விஜய் அங்கு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேதிகள் இறுதியாகவில்லை என்றாலும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் இந்த மாநாடு நடைபெறலாம் என சொல்லப்படுகிறது.

News August 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: குற்றங்கடிதல் ▶குறள் எண்: 436 ▶குறள்: தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. ▶ பொருள்: முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?

News August 23, 2025

₹64,000 சம்பளம்… 10,270 காலியிடங்கள்

image

IBPS கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆக.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள 10,270 கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் தமிழகத்துக்கு மட்டும் 894 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி, வயது: 20-28, பிரிலிமினரி & மெயின் தேர்வுகள் அடிப்படையில் ஆள்தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும்.

News August 23, 2025

தமிழகத்தில் தாமரை மலர்வதை விஜய் பார்ப்பார்: தமிழிசை

image

மாநாட்டில் ஒரு கொடிக்கம்பத்தை கூட ஒழுங்காக நட முடியாதவர்கள் எப்படி ஆட்சி நடத்துவார்கள் என விஜய்யை தமிழிசை விமர்சித்துள்ளார். விஜய் அரசியலில் புதியவர், அவர் வரவெல்லாம் பாஜகவை ஒன்றும் செய்யாது என கூறினார். தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாவிட்டாலும் தமிழகத்தில் தாமரை எல்லோரும் ஆச்சரியப்படும் அளவுக்கு மலரப்போகிறது, அதை தம்பி விஜய் பார்க்கத்தான் போகிறார் என்றும் தெரிவித்தார்.

News August 23, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 23 – ஆவணி 7 ▶ கிழமை: சனிக்கிழமை ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: பிரதமை ▶ சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.

News August 23, 2025

அமெரிக்காவுக்கு குட் பை… ஏஞ்செலினா முடிவு!

image

ஒரு காலத்தில் மக்களின் கனவுத் தேசமாக இருந்தது அமெரிக்கா. அந்த நாட்டில் குடியேறவே அனைவரும் விரும்பினர். ஆனால், காலம் மாறிவிட்டது. இப்போது அமெரிக்காவில் இருந்து வெளியேறவே பலரும் விரும்புகின்றனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், ஏஞ்செலினா ஜோலியும் வெளியேறப் போவதாக கூறப்படுகிறது. அரசியல் நிலையின்மை, அதிகரிக்கும் குற்றங்கள், நிதிச்சுமை போன்றவை இதற்கு காரணங்களாகும்.

error: Content is protected !!