News August 23, 2025
1.5 கோடி தொண்டர்கள் பிரிந்துள்ளனர்: வைத்திலிங்கம்

EPS-க்கு 2 கோடி தொண்டர்கள் இருப்பதாக சொல்கிறார், ஆனால் 80 லட்சம் வாக்குகள் தான் அதிமுகவுக்கு கிடைத்ததாக OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். உண்மையான தொண்டர்கள் 1.5 கோடி பேர் பிரிந்துக் கிடப்பதாகவும், அவர்களில் 99 சதவீதம் பேர் அதிமுக இணைய வேண்டும் என நினைப்பதாகவும் கூறினார். மேலும், அதிமுக ஒன்றிணைந்த பின் கூட்டணி அமைந்தால் அந்த அணி தேர்தலில் வெற்றிப் பெறும் என்றார்.
Similar News
News January 20, 2026
BREAKING: அரக்கோணம் EX.MLA காலமானார்!

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பவானி கருணாகரன். இவர் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியில் வசித்து வந்தார். உடல்நல குறைவால் இன்று (ஜனவரி 20) காலமானார். அவரது உடலுக்கு அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது மறைவு அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News January 20, 2026
அமைச்சர் KN நேருவுக்கு புதிய சிக்கல்!

அமைச்சர் <<18786820>>KN நேரு<<>> மீது ஏற்கனவே டெண்டர், வேலைநியமன ஊழல் புகார்கள் உள்ளன. இந்நிலையில், அரசு அதிகாரிகளின் இடமாற்றத்திற்காக ₹1 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டதற்கு ஆதாரங்கள் இருப்பதாக கூறி ED, TN அரசு மற்றும் DGP-யிடம் புதிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. சுமார் 340 அதிகாரிகளின் இடமாற்றத்தில், ₹365 கோடி வரை பணமோசடி நடந்துள்ளதாக ஆதாரங்களை இணைத்துள்ள ED, உடனே FIR பதிவு செய்ய வலியுறுத்தியுள்ளது.
News January 20, 2026
அவையில் கவர்னர் அவமதிக்கப்பட்டாரா?

பேரவையில் கவர்னர் ரவியின் மைக்கை பலமுறை ஆப் செய்து அவமதித்ததாக மக்கள் பவன் கூறியுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் TN அரசு தயாரித்த அறிக்கையில் உள்ளதாக கூறிய மக்கள் பவன், TN அரசு ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக உண்மைக்கு மாறான தகவல் இடம்பெற்றுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், முதலீடுகளில் TN 4-வதில் இருந்து 6-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


