News August 23, 2025

ஸ்ரீராமருடன் என்னை ஒப்பிட வேண்டாம்: நயினார்

image

பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் நயினாரின் போட்டோவை கடவுள் ராமரை போல் சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பகவான் ஸ்ரீராமருடன் தன்னை ஒப்பிட்டு பதாகைகள் வைக்க வேண்டாம் என்று பாஜகவினருக்கு நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நேற்று பதாகை வைத்திருந்ததை கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்றும், இதுபோன்று சித்தரித்து போட்டோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News August 23, 2025

NATIONAL SPACE DAY: நாட்டின் சாதனை திருநாள்!

image

இந்திய அறிவியல் வரலாற்றில் பொன்னான நாள் இன்று. 2023-ல் இதே நாளில்(ஆக.23) தான் நிலவில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கியது. இதனால் நிலவில் கால்பதித்த 4-வது நாடு, தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. இதை கொண்டாடும் வகையில் ஆக.23-ம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள்: Aryabhatta to Gaganyaan: Ancient Wisdom to Infinite Possibilities ஆகும்.

News August 23, 2025

ஒரே நடிகரின் ஒரே நாள் ரிலீஸ்.. தமிழ் படங்களின் லிஸ்ட்

image

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘DUDE’ மற்றும் ‘LIK’ ஆகிய 2 படங்களும் அக்.17 அன்று வெளியாகவுள்ளன. இவ்வாறு தமிழ் சினிமா ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது முதல் முறையல்ல. இது கமல், ரஜினி காலத்தில் இருந்தே உள்ளது. இவ்வாறு ஒரே ஹீரோவின் நடிப்பில் ஒரே நாளில் வெளியான இரு படங்களை மேலே Swipe செய்து பாருங்கள். நீங்கள் இப்படி படம் பார்த்தது உண்டா?

News August 23, 2025

தர்மஸ்தலா வழக்கில் அதிரடி திருப்பம்

image

தர்மஸ்தலாவில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ரேப் செய்து கொன்று புதைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், முன்னாள் பணியாளர் அடையாளம் காட்டிய இடத்தில் எந்தவித உடல்களும் இல்லை என்பது SIT விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பொய்யான புகார் அளித்ததாக பணியாளர் சின்னையா கைதாகியுள்ளார். அவரது வழக்கறிஞர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News August 23, 2025

விஜய் குடும்பத்திற்கு உதவி.. PHOTO மூலம் திமுக பதிலடி

image

திமுக & ஸ்டாலினை கடுமையாக விஜய் விமர்சித்தார். இந்நிலையில், விஜய்யின் குடும்பத்திற்கு கருணாநிதி உதவியதாக PHOTO மூலம் திமுகவினர் பதிலடி கொடுக்கின்றனர். நம்மால் பயனடைந்தவர்கள், நம்மிடம் நன்றி காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. முன்னேறும் காலத்தில் கருணாநிதியும், திமுகவும் இவர்களுக்கு தேவைப்பட்டார்கள். ஆனால் முன்னேறிய பின்பு ‘துரோகி’ பட்டம் சூட்டுவது மோசமான அரசியல் என விமர்சிக்கின்றனர்.

News August 23, 2025

விரைவில் சந்திரயான் 4 மிஷன்.. இஸ்ரோ உறுதி

image

சந்திரயான் 4 மற்றும் வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் ஆகியவற்றை விரைவில் செயல்படுத்தவுள்ளதாக ISRO தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பேசிய அவர், 2028-ல் தொடங்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பணிகள் 2035-க்குள் முழுமை பெறும் என உறுதியளித்தார். அதேநேரம், இந்த சிறப்புமிக்க நாளில் சுபான்ஷு சுக்லாவின் சாதனையை PM மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

News August 23, 2025

மாநில அரசுக்கு தொல்லை கொடுக்கும் மத்திய அரசு: CM

image

தமிழ்நாட்டின் அரசியலே சமூகநீதி அரசியல்தான்; வேறு எந்த அரசியலும் எடுபடாது என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து தொல்லை கொடுக்கிறது என்றும், குறுகிய எண்ணத்தோடு செயல்படும் மத்திய அரசு, மாநிலங்களுக்கு உரிய நிதிப்பங்கை அளிப்பதில்லை என குற்றஞ்சாட்டினார். மேலும், கட்சி சாராத நடுநிலையானவர்களை கவர்னராக நியமிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

News August 23, 2025

இந்த தங்கத்தின் விலை வெறும் ₹3,550

image

24 காரட் தங்கம் என்பது வேறு எந்த உலோகங்களும் சேர்க்காத 99.9 தூய்மையான தங்கமாகும். அதுவே, 9 காரட் தங்கத்தில் 37.5% மட்டுமே தூய்மையான தங்கமும், மீதமுள்ள 62.5% செம்பு, வெள்ளி, Zinc போன்ற உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு 1,000 கிராம் 9 கேரட் தங்கத்தில் 375 கிராம் மட்டுமே சுத்தமான தங்கம் சேர்க்கப்பட்டிருக்கும். இந்தியாவில் இதன் ஒரு கிராமின் விலை ₹3,550 ஆகும்.

News August 23, 2025

Hero அவதாரம் எடுத்த இயக்குநர் அபிஷன்..Back Story இதான்!

image

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை கமிட் செய்ய பல தயாரிப்பாளர்கள் வலை
வீசிக்கொண்டிருந்த நிலையில், அவரை
லாவகமாகத் தூக்கிய சௌந்தர்யா ரஜினி, அபிஷன் சொன்ன கதையைக் கேட்டவுடன் ‘இந்தக் கதைக்கு நீங்கதான் ஹீரோ என்றாராம். மேலும், யார்கிட்டயும் கதையை சொல்லவேண்டாம்’ என்று ஷாக் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து சீக்ரெட்டாக பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

News August 23, 2025

மூத்த தலைவர் மறைவு..CM ஸ்டாலின் இரங்கல்

image

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுரவரம் சுதாகர் ரெட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சுதாகர் ரெட்டி தனது வாழ்க்கையை மக்களின் போராட்டங்களுக்காக அர்ப்பணித்ததாக குறிப்பிட்ட அவர், அவரது மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிக்கான போராட்டத்திற்கு அவரது வாழ்க்கை தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!