News August 23, 2025

இது நடந்தால் CM ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து

image

பதவி பறிப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டுவர முயலும் நிலையில், CM-களின் கிரிமினல் வழக்குகளை ADR வெளியிட்டுள்ளது. இதில், தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி முதலிடம்(89), TN CM ஸ்டாலின் 2-வது இடம்(47), AP CM சந்திரபாபு 3-வது இடம்(19) வகிக்கின்றனர். மேலும், BJP ஆளும் MH-ல் CM பட்னவிஸ் 4 வழக்குகளுடன் 6-வது, KL CM பினராயி 8-வது இடத்தில் உள்ளனர். இந்த மசோதா சட்டமானால் இவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்படும்.

News August 23, 2025

DMK Vs TVK தான்.. அமைச்சர் முத்துசாமி

image

BJP, DMK-வை விளாசும் விஜய், ஆரம்பம் முதலே அதிமுகவை பொருட்படுத்துவதில்லை. அத்துடன், 2026 தேர்தலில் DMK Vs TVK இடையேதான் போட்டி என்றும் கூறி வருகிறார். இந்நிலையில், அமைச்சர் முத்துசாமியும் DMK, TVK இடையேதான் போட்டி என கூறியுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. முதல்வரை ‘Uncle’ என விஜய் கூறியது தவறு என்ற அவர், திமுகவை உயர்ந்த இடத்தில் பார்ப்பதற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

News August 23, 2025

தோனி, ரிஷப்பை விட நானே சிறந்தவன்

image

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் பற்றிய கேள்விக்கு CSK கேப்டன் ருதுராஜ் தோனியின் பெயரை கூற மறுத்திருக்கிறார். ஜூனியர் அகாடமி வீரர்களுடன் உரையாடிய அவர் தோனி, ரிஷப் பண்ட்-ஐ விட தானே சிறந்த கீப்பர் என நகைச்சுவையாக கூறினார். மேலும் அணியில் யாராவது டக் அவுட் ஆகினால் கன்னத்தில் அறைந்துவிடுவேன் என சிறுவர்களிடம் கலகலத்தார். தோனி ஓய்வு பெற்றால் ஒரு வேளை CSK கீப்பர் ருதுராஜ் தானா?

News August 23, 2025

தென்னகத்தின் அன்பே என்னை மாற்றியது: அனுராக் காஷ்யப்

image

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டை ‘டாக்ஸிக்’ உலகம் என விமர்சித்திருந்தார் அனுராக் காஷ்யப். இந்நிலையில், பாலிவுட் உலகம் தன்னை தொடர்ந்து புறக்கணித்ததாக கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தனது குடிப்பழக்கத்தை பாலிவுட் குறைகூறிக் கொண்டே இருந்ததாக கூறிய அவர், தென்னகத்தின் அன்பால் குடியை நிறுத்தியது மட்டுமல்லாமல், உடற்பயிற்சியை தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு வழங்குவது உறுதி?

image

<<17486137>>ரேஷன் கார்டுக்கு ₹5,000<<>> வழங்க TN முடிவு செய்திருப்பதாக 2 நாள்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மோடி ஜிஎஸ்டி குறைப்பை வெளியிட இருப்பதால், அதற்கு போட்டியாக தமிழக அரசும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே தீபாவளி நேரத்தில் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கும் அறிவிப்பை TN அரசு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News August 23, 2025

இந்த வாட்ச்சை எல்லாம் நீங்க வாட்ச் பண்ணிருக்கீங்களா?

image

ராணுவத்தின் செயல்பாடுகள் எப்போதும் ரகசியமானவை. அதேபோல், அவர்கள் பயன்படுத்தும் கைக்கடிகாரங்களும் தனித்துவமானவை. வெயில், மழை, குளிர் என அனைத்து தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற கடிகாரங்களையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த கடிகாரங்கள், காலத்திற்கு ஏற்றார்போல் நவீன தொழில்நுட்பங்களுடன் மாற்றம் கண்டு வருகின்றன. இவ்வாறான நவீன ஆர்மி வாட்ச் லிஸ்ட்டை மேலே பாருங்கள்.

News August 23, 2025

திமுகவின் வேரை அசைக்க முடியாது: அமைச்சர் ரகுபதி

image

திமுகவின் வேர் எங்கே இருக்கிறது என்பது கூட அமித்ஷாவுக்கு தெரியாது என அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். வரும் தேர்தலில் திமுகவை காணாமல் போக செய்ய வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியிருந்தார். இதுகுறித்து பேசிய ரகுபதி, ஆழமாக பாய்ந்துள்ள திமுகவின் வேரை அமித் ஷா மட்டுமல்ல, யாராலும் அழிக்க முடியாது என்றார். இது குறித்த உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க.

News August 23, 2025

தமிழிசை மீண்டும் கவர்னர் ஆகிறார்?

image

இல. கணேசன் மறைவு, சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தை சேர்ந்த கவர்னரே இல்லை என்ற நிலை உருவானது. இதனால், ஹெச்.ராஜா கவர்னராக வாய்ப்புள்ளது என தகவல் வெளியானது. இந்த பட்டியலில் ஏற்கெனவே கவர்னராக இருந்த தமிழிசையும் இருக்கிறாராம். இதற்காகவே அவர் அண்மையில் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பரிசீலனையில் உள்ளனராம்.

News August 23, 2025

இன்று மதியம் 2 மணிக்கு மேல்.. அலர்ட்.. அலர்ட்..

image

சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக, கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (மதியத்திற்கு மேல்) கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

News August 23, 2025

ஸ்ரீராமருடன் என்னை ஒப்பிட வேண்டாம்: நயினார்

image

பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் நயினாரின் போட்டோவை கடவுள் ராமரை போல் சித்தரித்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பகவான் ஸ்ரீராமருடன் தன்னை ஒப்பிட்டு பதாகைகள் வைக்க வேண்டாம் என்று பாஜகவினருக்கு நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நேற்று பதாகை வைத்திருந்ததை கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன் என்றும், இதுபோன்று சித்தரித்து போட்டோ வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!