News August 23, 2025
இந்த வாட்ச்சை எல்லாம் நீங்க வாட்ச் பண்ணிருக்கீங்களா?

ராணுவத்தின் செயல்பாடுகள் எப்போதும் ரகசியமானவை. அதேபோல், அவர்கள் பயன்படுத்தும் கைக்கடிகாரங்களும் தனித்துவமானவை. வெயில், மழை, குளிர் என அனைத்து தட்பவெப்ப நிலைக்கும் ஏற்ற கடிகாரங்களையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த கடிகாரங்கள், காலத்திற்கு ஏற்றார்போல் நவீன தொழில்நுட்பங்களுடன் மாற்றம் கண்டு வருகின்றன. இவ்வாறான நவீன ஆர்மி வாட்ச் லிஸ்ட்டை மேலே பாருங்கள்.
Similar News
News January 13, 2026
ராஜபாளையத்தை குறி வைக்கும் பிரபல நடிகை

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் EPS தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விரும்ப மனு அளித்துள்ள நடிகை கவுதமி நேற்று பங்கேற்றார். கடந்த தேர்தலின் போது பாஜகவில் இருந்த இவருக்கு இத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அதிமுக வில் இணைந்த கவுதமி ராஜபாளையம் தொகுதியை குறி வைத்துள்ள நிலையில் இங்கு போட்டியிட்டால் 100% வெற்றி உறுதி என தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
அதிமுக வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் போடும் பிளான்!

அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் EPS விறுவிறுப்பாக நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், தொகுதியில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறாராம். குறிப்பாக, திமுகவின் விமர்சனத்திற்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளாராம்.
News January 13, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹400 உயர்வு

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று(ஜன.13) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹50 உயர்ந்து ₹13,170-க்கும், சவரன் ₹400 உயர்ந்து, ₹1,05,360-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் மட்டும் தங்கம் சுமார் ₹4,560 அதிகரித்துள்ளது. <<18842242>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


