News August 24, 2025

விஜய் கட்சிக்கு ஆதரவாக மூத்த தலைவர்கள்?

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட <<17500606>>பெங்களூரு புகழேந்தி<<>>, மருது அழகுராஜா உள்ளிட்டோர், MGR-க்கு அடுத்து விஜய்தான் என்று ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, மீண்டும் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என EPS திட்டவட்டமாக கூறியபின் தான், இவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதனால், 2026 தேர்தலில் EPS-க்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் பரப்புரை செய்வார்கள் என கூறப்படுகிறது.

News August 24, 2025

செல்போன் ரீசார்ஜ்.. இந்த ஆஃபரை பாருங்க

image

ஜியோ, ஏர்டெல் தங்களது ₹249 பேஸிக் ரீசார்ஜ்களை ரத்து செய்துவிட்டதால் பட்ஜெட்வாசிகள் பலரும் BSNL-க்கு படையெடுத்து வருகின்றனர். MNP மூலம் பலரும் BSNL உடன் இணைந்து வருகின்றனராம். காரணம், BSNL-ல் உள்ள ₹599 திட்டத்தில் 84 நாள்களுக்கு தினந்தோறும் 3GB டேட்டா, அது தீர்ந்த பிறகு 40kbps ஸ்பீடில் இணைய வசதி, 100 SMS, அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகள் உள்ளன. இதனால் மாதத்திற்கு ₹200 மட்டுமே ஆகுமாம். சூப்பர்ல..!

News August 24, 2025

‘ஓம்’ என ஓசை எழுப்பும் தொந்தி இல்லாத விநாயகர்!

image

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் வருவதாக கூறுகின்றனர். இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல், ஓம் வடிவத்தில் குறுகி காணப்படுவதால், ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். ஓம் என்ற சத்தம் கேட்பதால், அவரை ஓங்கார கணபதி என்றும் அழைக்கின்றனர். சுந்தரர் இத்தல இறைவனிடம் பதிகம் பாடி, பொன் பொருளை பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

News August 24, 2025

தமிழகம் வரும் பஞ்சாப் முதல்வர்

image

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நகர்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆக.26-ல் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இதற்கான விழாவில் கலந்துகொள்ளுமாறு பஞ்சாப் CM பகவந்த் மானுக்கு, திமுக MP வில்சன் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். இதன் பேரில் அவர் இந்நிகழ்வில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இத்திட்டத்திற்கு பெற்றோர், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 24, 2025

என்னை மிரட்டிய பவுலர் யார்? ருதுராஜ் கெய்வாட் பதில்

image

சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் புச்சிபாபு கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் மராட்டியம் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த சூழலில் கெய்க்வாட் சூப்பர் கிங்ஸ் அகாடமியில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அதில் அவரிடம் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் டிரெண்ட் போல்ட் என பதிலளித்துள்ளார்.

News August 24, 2025

உடனடியாக ₹5 லட்சம் கடன்.. தமிழக அரசு அறிவிப்பு

image

விவசாயிகள் விண்ணப்பித்த ஒரே நாளில் ₹5 லட்சம் வரை பயிர்க்கடன் வழங்கப்படுவதாக TN அரசு தெரிவித்துள்ளது. நெல், கரும்பு, பருத்தி, நிலக்கடலை, மக்காச்சோளம் ஆகியவற்றை பயிரிட இந்த கடன்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ₹17,000 கோடி பயிர்க்கடனும், ₹3,000 கோடி கால்நடை வளர்ப்புக் கடனும் வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. SHARE IT.

News August 24, 2025

இது வெட்கக்கேடு: திமுக அரசுக்கு சீமான் கேள்வி

image

தூய்மைப் பணியின் போது உயிரிழந்த வரலட்சுமி குடும்பத்துக்கு ₹1 கோடி நிதி வழங்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி சீமான் வெளியிட்ட அறிக்கையில், மனிதக் கழிவை மனிதனே அள்ளும் அவல நிலை தற்போதும் தொடர்வதாகவும், அதில் ஆதித்தொல்குடி மக்களே ஈடுபடுத்தப்படுவதும் வெட்கக்கேடானது இல்லையா? இதுதான் குலத்தொழிலுக்கு எதிரான திமுக அரசின் முற்போக்கு செயல்பாடா? என கேட்டுள்ளார்.

News August 24, 2025

10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை: இபிஎஸ்

image

திமுக ஆட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் இபிஎஸ் சாடினார். திருவெறும்பூரில் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 10% கூட திமுக நிறைவேற்றவில்லை என்றும், ஆனால் 98% வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக திமுக கூறுவது பொய் என்றார். மேலும், தேர்தலை கணக்கிட்டே 30 லட்சம் மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.

News August 24, 2025

லேடன் தெரியுமா? பின்லேடன்: USA-க்கு நினைவூட்டல்

image

பாகிஸ்தானுடன், அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் நிலையில், பழைய வரலாற்றை அமெரிக்கா மறந்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தேடிய பயங்கரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் தான் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்காவுக்கு நினைவுப்படுத்த விரும்புவதாக கூறினார். தங்களது வசதிக்கேற்ப அரசியல் செய்வதை இரு நாடுகளுமே விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News August 24, 2025

பயங்கரவாத அமைப்பின் பிடியில் 215 பள்ளிகள்

image

ஜம்மு – காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் அறக்கட்டளைக்கு சொந்தமான 215 பள்ளிகளை அந்த யூனியன் பிரதேச அரசு கைப்பற்றியுள்ளது. இந்த பள்ளிகள் 10 மாவட்டங்களில் உள்ளதால், சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இதனை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 51,000 மாணவர்கள் பயின்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!