News August 24, 2025

இதுவும் கடந்து போகும்..!

image

பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்ற போதிலும், சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் பணத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம். வாழ்வில் இன்பம் மட்டுமே இருந்தாலும், அதுவும் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்திவிடும். துன்பம் வரும் போது, துவள வேண்டாம். இதுவும் கடந்து போகும் என்ற மனநிலைக்கு வந்துவிடுங்கள். இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. இரண்டையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

News August 24, 2025

வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்.. SBI அறிவிப்பு

image

ஓராண்டுக்கும் மேலாக பரிவர்த்தனை இல்லாத SBI கணக்குகளை, வங்கிக் கிளைகள், நெட்/ மொபைல் பேங்கிங் மூலம் KYC-ஐ புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று (ஆக.23) வெளியான நிலையில், அடுத்த ஒரு மாதத்திற்குள் KYC புதுப்பிக்கப்படவில்லை என்றால், ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை (அ) மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கிக் கணக்குகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி முடக்கப்படும் என SBI தெரிவித்துள்ளது.

News August 24, 2025

உடலை சுத்தமாக்கும் ‘துளசி தேநீர்’

image

ஆயுர்வேதத்தில் ஆன்மாவை தூய்மைப்படுத்தும் மூலிகையாக சொல்லப்படும் ‘துளசி’ உடலின் நச்சுகளை நீக்கக் கூடியது. மேலும், இருமல், மூச்சுப் பிரச்னை உள்ளவர்களுக்கு நிவாரணம் தரும். நன்கு கொதித்த நீரை உலர்ந்த துளசி இலைகள் மீது ஊற்றி, 20-30 நிமிடங்கள் ஊறவிடவும். பின் சூடாக அருந்தலாம். ஒரு நாளைக்கு 3 கப் அருந்தலாம். இதனுடன் இஞ்சி (அ) ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொள்ளலாம். SHARE IT!

News August 24, 2025

திமுக மாநாட்டை விஞ்சிய தவெக மாநாடு?

image

தமிழக அரசியலில் பிரபலமாக பேசப்படுவது திருச்சி திமுக மாநாடு தான். ஆனால், அதையே விஞ்சும் அளவுக்கு பிரமாண்ட கூட்டத்தை மதுரை மாநாட்டில் விஜய் கூட்டி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மாநாட்டில் அதிகளவில் பங்கேற்றது இளைஞர்கள் தான். இளைஞர்களின் இந்த எழுச்சியை விஜய் சரியாக பயன்படுத்தி, விரைவிலேயே மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும். அது நடந்தால், 2026 தேர்தல் களம் எளிதாக இருக்காது என கூறுகின்றனர்.

News August 24, 2025

Asian Shooting Games: தங்கத்தை அள்ளும் தமிழக சிங்கப்பெண்!

image

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் 2-வது தங்கத்தை வென்றுள்ளார்.
கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜூன் பாபுதா & இளவேனில் வாலறிவன் ஜோடி சீன ஜோடியை 17-11 என தோற்கடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் தொடரில் ஏற்கெனவே, தனிநபர் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 24, 2025

திமுக கூட்டணியில் புதிய கட்சி?

image

கூட்டணி குறித்த முடிவை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் <<17495037>>ராமதாஸ்<<>>. ஆனால், அவர் திமுக கூட்டணியில் இணைய தீவிரமாக பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில்தான், ராமதாஸ் – திருமா ரகசிய சந்திப்பு நடந்ததாக தெரிகிறது. வட மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். சீட் பேரம் இறுதியானபின், கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News August 24, 2025

CINEMA ROUNDUP: ஹீரோயினான பிக்பாஸ் பூர்ணிமா!

image

◆பிக் பாஸ் புகழ் பூர்ணிமா ‘Yellow’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
◆அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘பாம்’ படத்தின் ‘இன்னும் எத்தனை காலம்’ என்ற பாடல் வெளிவந்துள்ளது.
◆‘பல்டி’ படத்தில் இருந்து ‘ஜாலாகாரி’ என்ற பாடல் இன்று வெளியாகிறது. இது சாய் அபயங்கரின் முதல் சினிமா பாடலாகும்.
◆ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டும் தான் நடிக்க விரும்புவதாக கல்யாணி பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

News August 24, 2025

அதிமுக ஆட்சி அமைந்தால்.. இபிஎஸ் தேர்தல் வாக்குறுதிகள்

image

தீவிர பரப்புரையை மேற்கொண்டு வரும் இபிஎஸ், மக்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். ஏற்கெனவே, புதுமண தம்பதிகளுக்கு பட்டு வேட்டி, சேலை, தீபாவளி பரிசாக சேலை உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி இருந்தார். தற்போது, அதிமுக ஆட்சி அமைந்த பிறகு பதிவு செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ₹75,000 மானியம் வழங்கப்படும்; திருமண உதவி தொகை திட்டம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

News August 24, 2025

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுக: கமல்

image

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டியது கட்டாயம் என கமல் தெரிவித்துள்ளார். கோட்டூர்புரத்தில் மாநில கல்வி கொள்கை உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கமல், கல்வியில் கூட்டாட்சி வழங்குவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மாநில அரசுகளுக்கு தான் அம்மாநில மக்களின் மனநிலையும், கள எதார்த்தமும் தெரியும் என்றார்.

News August 24, 2025

Health Tips: உடற்பயிற்சிக்கு பின் இதெல்லாம் சாப்பிட்டுறாதீங்க

image

உடற்பயிற்சி செய்துவிட்டு வந்தவுடன் சர்க்கரை பொருள்களை உட்கொண்டால் செய்த உடற்பயிற்சிக்கு பலன் இருக்காது. இதனால் உடற்பயிற்சிக்கு பின் சர்க்கரையை போலவே மது, காரமான உணவு, சர்க்கரை சேர்த்த பழச்சாறு, Junk Foods சாப்பிடுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக, புரதச் சத்து அதிகமுள்ள உணவு, Sweet Potato, பழங்கள், காய் கறிகளை உண்ணலாம். நீங்க தினமும் உடற்பயிற்சி செய்றீங்களா?

error: Content is protected !!