News September 13, 2024

தங்கம் விலை சவரனுக்கு ₹960 அதிகரிப்பு

image

தங்கம் விலை சவரனுக்கு இன்று ₹960 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ₹6,705க்கும், 1 சவரன் தங்கம் ₹ 53,640க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ₹960 உயர்ந்து ₹54,600க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் தங்கம் விலையும் ₹120 அதிகரித்து இன்று ₹6,825க்கு விற்கப்படுகிறது. SHARE IT

News September 13, 2024

பொய்… பொய்… நம்பாதீங்க: அதானி குழுமம்

image

சுவிஸ் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லையென அதானி குழுமம் மறுத்துள்ளது. பணமோசடி வழக்கில் அதானி குழுமத்தின் $310 மில்லியன் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி மறுப்பதாக தெரிவித்துள்ள அக்குழுமம், தங்கள் நிறுவன கணக்குகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விளக்கியுள்ளது.

News September 13, 2024

அடுத்தாண்டு முதல் BSNL 4ஜி: அமைச்சர் நம்பிக்கை

image

நாடு முழுவதும் BSNL 4ஜி அடுத்த ஆண்டு மத்தியில் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார். இதற்காக நாடு முழுவதும் டவர்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதுவரை 22.5 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் 1 லட்சம் டவர்கள் என்ற அமைக்கப்பட்டு, தடையின்றி 4ஜி சேவை வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News September 13, 2024

பெட்ரோல் – டீசல் விலை குறைகிறது?

image

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்தால், பெட்ரோல் – டீசல் விலை குறைக்கப்படும் என்று பெட்ரோலிய அமைச்சக செயலாளர் பங்கஜ் ஜெயின் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேரல் US$ 67 ஆக குறைந்திருப்பதால், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜெயின், இதேநிலை நீடித்தால் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலிக்கும் என்றார்.

News September 13, 2024

2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி : H. ராஜா

image

2026இல் தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் H. ராஜா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கும் பாஜக கூட்டணிக்கும் 20 லட்சம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருந்ததாகவும், 18.5% வாக்குகள் பாஜக கூட்டணிக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்று H. ராஜா சாெல்வது சாத்தியமாகுமா என்பது குறித்த உங்கள் கமெண்டை பதிவிடுங்கள்.

News September 13, 2024

தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்

image

திமுக பவள விழாவுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், முன்னேறிய மாநிலமாக TNஐ மாற்றியது திமுகவின் சாதனை எனக் குறிப்பிட்டுள்ளார். அண்ணா தொடங்கிய திமுக, ‘தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறது’ என்ற தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்திட, செப். 17 படையெனத் திரள அழைத்துள்ளார்.

News September 13, 2024

மகாவிஷ்ணுவின் வங்கி கணக்குகள் ஆய்வு

image

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவரது பின்புலத்தை அறியும் வகையில், பணப் பரிவர்த்தனைகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, திருப்பூரில் உள்ள அவரது பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், அவரை இன்று மீண்டும் சென்னை அழைத்து வர முடிவெடுத்துள்ளனர். விசாரணையில் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News September 13, 2024

40,000 TCS ஊழியர்களுக்கு I.T. நோட்டீஸ்

image

40,000 TCS ஊழியர்களுக்கு I.T. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முன்னணி நிறுவனமான TCSஇல் ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு 2024-25 மார்ச் வரையிலான நிதி காலாண்டுக்கான வரி முழுமையாக செலுத்தவில்லை எனக் கூறி, ₹50,000 – ₹1 லட்சம் வரை செலுத்தக் கோரி நோட்டீஸ் வந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறால், TDS கிளைம் அப்டேட் செய்யாததே காரணமாகக் கூறப்படுகிறது.

News September 13, 2024

தலைமைக்கு தமிழக காங்கிரஸ் கடிதம்?

image

அனைத்து சமூகத்தினருக்கும் சம பிரதிநிதித்துவம் அளிக்கக் கோரி காங். தலைமைக்கு தமிழக நிர்வாகிகள் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் கட்சியை பலப்படுத்த வேண்டும் எனில், அனைத்து சமுதாயத்தினருக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, கட்சியில் பட்டியலின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாக அதில் புகார் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

News September 13, 2024

டயட் லிஸ்டில் துவரம் பருப்பை விட்டுவிடாதீர்கள்..!

image

சமச்சீர் உணவுப் பட்டியலில் துவரம் பருப்பு நிச்சயம் இருக்க வேண்டுமென Nutritionist கூறுகின்றனர். வயிற்றுக்கு கெடுதலே செய்யாமல், உடலுக்கு வலுவூட்டும் துவரை, ஏராளமான மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. செரிமான சக்தி அதிகரிக்கும், காயங்களை விரைந்து குணமாக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றி, தொற்றுகளை அழிக்கும் என்கிறார்கள். மேலும், ரத்த சோகையைக் குணப்படுத்தி, தசைகளுக்கு வலிமை கொடுக்குமாம். Share it.

error: Content is protected !!