India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் <<14090205>>கெஜ்ரிவாலுக்கு<<>> ஜாமின் அளித்த SC, பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. வழக்குத் தொடர்பாக கருத்துகளை வெளியிடக் கூடாது, விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு வரும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்றும் SC உத்தரவிட்டுள்ளது. CBI உரிய நடைமுறையை பின்பற்றி இருப்பதாகவும், அதே நேரத்தில் நீண்டகால சிறைவாசம் என்பது சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும் SC தெரிவித்துள்ளது.
டெல்லி CM கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கோரியும் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே ED வழக்கிலும் சுப்ரீம் கோர்ட் ஜாமின் அளித்துள்ளது. இதனால் கெஜ்ரிவால் விடுதலையாவது உறுதியாகியுள்ளது.
ஒன்றிய அரசும், ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என திமுக எம்.பி கனிமொழி எச்சரித்துள்ளார். “பணியுமாம் என்றும் பெருமை சிறுமை, அணியுமாம் தன்னை வியந்து” என திருக்குறளை தனது X பக்கத்தில் பதிவிட்டு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஸ்ரீ அன்னபூர்ணா உணவக உரிமையாளர், நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்டது தொடர்பாக அவர் இந்த கருத்தை பதிவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
அவதூறு வழக்கு விசாரணைக்காக சபாநாயகர் அப்பாவு, சென்னையில் உள்ள எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அப்பாவுக்கு எதிராக அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதன் வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி, அப்பாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மாருதி சுசூகி நிறுவனம் CNG ஸ்விஃப்ட் வேரியண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல், டீசல் வேரியண்ட்களில் ஏற்கெனவே அக்கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், CNG காரை தற்போது மாருதி சுசூகி அறிமுகம் செய்துள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ₹8.20 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 கிலோ CNGக்கு 32.85 கிலோ மீட்டர் தூர மைலேஜ் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
திமுக அரசைக் கண்டித்து, சென்னையில் வரும் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்காெடுமைகளை திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் 6 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனவும் இபிஎஸ் சாடியுள்ளார்.
வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ₹3,500 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் வெள்ளி ₹91.50க்கும், 1 கிலோ வெள்ளி ₹91,500க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ₹3.50 உயர்ந்து ₹95ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிலோவுக்கு ₹3,500 உயர்ந்து ₹95,000க்கு விற்கப்படுகிறது. இதையும் சேர்த்து, கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹5,000 அதிகரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11ம் தேதிக்கான அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் 5 நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தாெடங்கியது. இதையடுத்து ஆன்லைன் மற்றும் டிக்கெட் முன்பதிவு மையங்கள் மூலம் பயணிகள் வேகமாக முன்பதிவு செய்யத் தொடங்கினர். இதனால் உடனடியாக அனைத்து டிக்கெட்டுகளின் முன்பதிவும் முடிந்து விட்டது. ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு நாளை நடக்கிறது.
1) காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது? 2) உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்? 3) குறைந்த நேரத்தில் சூரியனை சுற்றி வரும் கோள் எது? 4.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது? 5) விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது? 6) இந்தியாவின் முதல் சபாநாயகர் யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
சீமான் தலைமையை ஏற்கும் கட்சியுடனேயே கூட்டணி என்று நாதக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தியிடம், தவெக கூட்டணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், சீமானும் விஜய்யும் சந்தித்து அரசியல் பேசியது உண்மைதான். ஆனால் கூட்டணி குறித்து இருவரும் பேசவில்லை என்று கூறினார். விஜய் கட்சியோடு கூட்டணி என்று ஒருபோதும் சீமான் அறிவித்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.