News September 13, 2024

HAPPY BIRTHDAY❤️: பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப். 13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

News September 13, 2024

ராசி பலன்கள் (13.09.2024)

image

*மேஷம் – வெற்றி கிடைக்கும் *ரிஷபம் – செலவு உண்டாகும் *மிதுனம் – தெளிவு ஏற்படும் *கடகம் – பயம் உருவாகும் *சிம்மம் – தடங்கல் ஏற்படும் *கன்னி – தோல்வியை சந்திப்பீர் *துலாம் – சோதனை நாளாக இருக்கும் *விருச்சிகம் – முயற்சி வெற்றி தரும் *தனுசு – நலம் உண்டாகும் *மகரம் – நஷ்டம் ஏற்படும் *கும்பம் – தானம் அளிப்பீர் *மீனம் – நன்மை வந்து சேரும்.

News September 13, 2024

நாளை மறுநாள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்

image

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது. இந்நிலையில், அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக செப்.14ஆம் தேதி அக்கட்சி தலைமையகத்தில் வைக்கப்படும் என CPM தெரிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

CAT தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

image

நாடு முழுவதும் முதுநிலை மேலாண்மை படிப்புகளுக்கு நடத்தப்படும் கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (செப்.13) கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,யில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் அல்லது அதற்கு சமமான CGPAவைப் பெற்றிருக்க வேண்டும். நடப்பு ஆண்டுக்கான கேட் தேர்வு நவ.24ஆம் தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு இங்கே க்ளிக் பண்ணவும்.

News September 12, 2024

வடிவேலு படங்களின் போஸ்டர் வெளியானது

image

நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளையொட்டி அவர் நடித்துவரும் ‘மாரீசன்’, ‘கேங்கர்ஸ்’ படங்களின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுதீஷ் சங்கர் இயக்கும் ‘மாரீசன்’ படத்தில் ஃபகத் பாசில் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ‘கேங்கர்ஸ்’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் சுந்தர்.சி உடன் இணைந்து நடித்து வருகிறார் வடிவேலு.

News September 12, 2024

மோடியை தனியாக சந்திக்க புடின் திட்டம்

image

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்ய அதிபர் புடினைச் சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து புடினிடம் தோவல் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின்போது, ரஷ்யாவில் அக்.22ல் நடைபெறும் BRICS மாநாட்டையொட்டி, மோடியை புடின் தனியாக சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் சிறந்த நண்பர் மோடி எனவும் புடின் குறிப்பிட்டார்.

News September 12, 2024

அனைத்து மாவட்டங்களிலும் வருகிறது ‘மெகா ஸ்டோர்’

image

தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகமும், கூட்டுறவுத்துறையும் இணைந்து வீட்டிற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யும் வகையில் மாவட்ட வாரியாக ‘மெகா ஸ்டோரை’ திறக்க திட்டமிட்டுள்ளது. அதில், கூட்டுறவு சங்கங்களின் தயாரிப்புகள், மகளிர் சுய உதவிக்குழு தயாரிக்கும் பொருட்கள், மலைவாழ் மக்கள் தயாரிக்கும் பொருட்கள், மருந்துகள், விவசாயிகளிடம் இருந்து காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

News September 12, 2024

மாணவர்களுக்காக அரசு பணியை உதறிய அதிகாரி

image

IRS அதிகாரி ரவி கபூர், தனது அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு, UPSC தேர்வு எழுதும் மாணவர்களுக்காக இலவச வழிகாட்டுதல் பயிற்சியை வழங்கி வருகிறார். கடந்த 2021ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், தற்போது 3 லட்சம் மாணவர்கள் இலவச பயிற்சி பெற்று வருகின்றனர். மன ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகள், கல்வி சார்ந்து தேவையான உதவிகள், வழிகாட்டுதல்களை அவர் வழங்கிவருகிறார்.

News September 12, 2024

1.30 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு தயார்

image

ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 3 லட்சம் பேரில், 1.30 லட்சம் பேருக்கு கார்டுகள் தயாராக உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். புதிய கார்டுகளை விநியோகிக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த மாதம் முடிவதற்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும், அதற்கான பணிகள் தொடங்கியதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News September 12, 2024

பதக்கங்கள் குவிக்கும் தமிழக வீராங்கனைகள்

image

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். 5.79மீ நீளம் தாண்டிய பிரதிக்‌ஷா தங்கமும், 5.75மீ நீளம் தாண்டிய லக்‌ஷன்யா வெள்ளியும் வென்றனர். முன்னதாக, ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜிதின் 7.61மீ தாண்டி தங்கம் வென்ற நிலையில், வீராங்கனைகளும் பதக்கங்களை குவித்துள்ளனர்.

error: Content is protected !!