India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராலிம்பிக்ஸ் வில்வித்தையில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் ஹர்விந்தர் சிங், பாரிசில் தான் பயன்படுத்திய வில், அம்பை பிரதமர் மோடிக்கு பரிசளித்துள்ளார். இன்று பிரதமர் மோடியை சந்தித்தபின் பேசிய அவர், “பாராலிம்பிக் வெற்றியாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் விளையாட்டு ஊழியர்கள் உட்பட அனைவரையும் பிரதமர் நேரில் சந்தித்து பேசினார். அவர் வாழ்த்தியது எங்களை மிகவும் ஊக்கப்படுத்தியது” எனக் கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் மேஜர் அந்தஸ்தில் உள்ள 2 ராணுவ அதிகாரிகளை அடித்து போட்டு, அவர்களுடன் சென்ற ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு வந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தூரில் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பது, தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்த பணம், நகையும் திருடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார், மீதமுள்ள நால்வரை பிடிக்க 10 தனிப்படை அமைத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் EPSஇன் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களை மையப்படுத்தி இந்த பயணம் இருக்குமென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர் தோல்விகளால் சோர்ந்து போயுள்ள நிர்வாகிகளுக்கு இந்த சூறாவளி சுற்றுப்பயணம் உற்சாகமளிக்கிறதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
‘கூல் லிப்’ போன்ற போதைப் பொருளை பாதுகாப்பற்றதாக அறிவித்து நாடு முழுவதும் ஏன் தடை விதிக்கக் கூடாது என ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் அடிமையாகி வருவதாகவும், இளம் தலைமுறையின் சிந்திக்கும் திறன் முற்றிலும் மறைந்து வருவதாகவும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்கப் போகிறோம் என்றும் அச்சம் தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.5% வரை அதிகரித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 83,000 என்ற புதிய உச்சத்தை கடந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 25,415 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக்காக 3 நாட்கள் காவலில் எடுத்துள்ளனர். அதன்படி, அவரை திருப்பூர் அழைத்துச் சென்று, அங்குள்ள அவருக்கு சொந்தமான பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மகாவிஷ்ணுவிடம் இருந்த ஹாட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாளை அவர் சென்னை அழைத்து வரப்பட உள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என்றும் கூறியுள்ளது.
பார்கின்சன் நோய் மூளையுடன் தொடர்புடையது எனக் கூறப்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு அமைப்பு, 9,350 பேரிடம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பித்துள்ளது. அதில், பார்கின்சன் நோய்க்கு குடல் பாதிப்பால் ஏற்படும் ஜீரணப் பிரச்னையே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீரண பிரச்னையால் உருவாகும் வாயுக்கள் உள்ளிட்டவை மூளைக்கு செல்வதாகவும், அதனால் பார்கின்சன் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இன்று 10.30 மணிக்கு GK வினா – விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) கிரிகர் கோகன் மெண்டல் 2) கந்தகம் 3) ஜே.சி. போஸ் 4) 20% – 25% 5) தீக்கோழி 6) ஈமோஃபீலியா (ரத்தம் உறைதல் குறைபாடு) 7) ஆலமரம். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கு பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
₹189, ₹479 கட்டணங்களில் 2 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதில் ₹189 திட்டம் 28 நாள் வேலிடிட்டி கொண்டதாகும். இதில் 300 எஸ்எம்எஸ் அனுப்பலாம். அன்லிமிடெட் அழைப்பு மேற்கொள்ளலாம். ₹479 திட்டம் 84 நாள்கள் வேலிடிட்டி கொண்டதாகும். இதில் அன்லிமிடெட் அழைப்பு, 6 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. நீண்டநாள் வேலிடிட்டி விரும்புவோருக்கு இது மிகவும் உகந்தத் திட்டமாகும். SHARE IT
Sorry, no posts matched your criteria.