India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அக்டோபர் 15ஆம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் எனக் குறிப்பிட்ட அவர், முன்னெச்சரிக்கையாக சென்னையில் 100, பிற மாவட்டங்களில் 900 இடங்களில் முகாம் நடத்தப்படும் என்றார். மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
2024ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் ஜான் ஜெ.ஹாப்ஃபீல்ட், கனடாவின் ஜாஃப்ரே இ.ஹிண்டனுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலை.,யின் ஆராய்ச்சியாளராகவும், ஜாஃப்ரே கனடாவில் உள்ள டொரான்டோ பல்கலை.,யின் ஆராய்ச்சியாளராகவும் உள்ளனர்.
RSS பேரணியை தொடங்கி வைத்ததால், அதிமுக MLA தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவிகளை EPS பறித்தார். இந்நிலையில், என் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. நீக்கப்பட்டுவிட்டால் ஓகே ரைட் என சொல்ல வேண்டியது தான் என அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே, பாஜகவில் ஐக்கியமாக உள்ளதாக செய்திகள் வெளியானது. தற்போது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதால், அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசிப் படமான ‘தளபதி69’இல், பெரிய mass காட்டும் வகையில் ஒரு பாடலை மிகப் பிரமாண்டமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது என்ற தகவலை ‘SIIMA’ பகிர்ந்துள்ளது. ‘One Last Song’ என்ற அந்த பாடலை அசல் கோலார் எழுத, 500க்கு மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடலையும் நடனத்தையும் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும் என்கின்றனர். ஸ்டெப்ஸ் போட நீங்கள் தயாரா?
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற ஷாக் சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. கந்தம்பட்டியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சதாசிவம் என்பவர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய அலுவலகத்திற்கு ரெய்டு வரும் முன் அலர்ட் செய்தால் மாதம் ₹50,000, முன்பணமாக ₹1 லட்சம் தருவதாக அவர் பேரம் பேசியுள்ளார். லஞ்சம் கொடுக்க வர சொல்லி அவரை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
ஹரியானா தேர்தல் முடிவுகள் தாமதமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதாக தேர்தல் ஆணையத்தில் காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புகார் அளித்துள்ளார். காலை 9 – 11 மணி வரை எவ்வித விளக்கமும் இன்றி தாமதமாக முடிவுகளை பதிவேற்றம் செய்ததாகவும், உண்மையான முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொடக்கத்தில் காங். முன்னிலை வகித்த நிலையில், தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. கிழக்கு திசைக்காற்று தமிழகத்தின் ஊடே செல்வதால், வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ISRO-வில் காலியாக உள்ள 99 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (அக்.9) கடைசி நாளாகும். Medical Officer உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: ITI, MBBS, M.E, M.Tech, Any Degree. சம்பளம் வரம்பு: ₹21,700 – ₹2,08,700. வயது: 18-35. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு & நேர்காணல். கூடுதல் தகவலுக்கு <
உமர் அப்துல்லா ஜம்மு – காஷ்மீர் முதல்வராவார் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா அறிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் தங்களுக்கு வழங்கியுள்ளதாகவும், மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்வோம் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு & காஷ்மீரில் காங்.- தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஹரியானாவில் காங்கிரஸுக்கு சாதகமான சூழல் இருந்தும், பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஜாதி ரீதியான வாக்கு வங்கி தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த யுக்தியை பயன்படுத்தியே பாஜக வென்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். காங்கிரஸுக்கு ஆதரவாக ஜாட் சமூக மக்கள் 27% இருந்தாலும், ஜாட் அல்லாத ஓபிசி, உயர் சாதி மற்றும் பழங்குடியினரின் வாக்குகளை ஒருங்கிணைத்ததன் மூலம் பாஜக நாற்காலியை தக்கவைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.