News October 10, 2024

Recipe: முசுக்கை அடை செய்வது எப்படி?

image

சின்ன வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, முசுக்கை இலைகள் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இவற்றை எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, மல்லித் தழைகளைச் சேர்த்து தாளித்து, நன்றாக வதக்கவும். பின்னர், இக்கலவையை மசிய அரைத்து, சாமை அரிசி மாவுடன் கலந்து பிசையவும். அதை சூடான தோசைக் கல்லின் மேல் தடிமனாக தட்டி, வேக வைத்து எடுத்தால், சுவையான முசுக்கை அடை ரெடி.

News October 10, 2024

‘வேட்டையன்’ First View விமர்சனம்

image

ஞானவேலின் சமூக நீதி பார்வையில் ரஜினியின் மாஸ் கமர்ஷியல் படமாக வேட்டையன் இருக்கிறது. ரஜினி, அமிதாப்பின் அசுரத்தனமான ஸ்கிரீன் பிரசன்ஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. என்கவுன்டருக்கு எதிராக மட்டுமல்ல கல்வியில் நடக்கும் ஊழலையும் படம் பேசி இருக்கிறது. குற்ற விசாரணையாக நகரும் முதல் பாதி மிரள வைப்பதாக கூறும் பார்வையாளர்கள், 2ஆம் பாதியில் கொஞ்சம் தொய்வு என்கின்றனர். WAY2NEWS-இன் முழு Review-க்கு காத்திருங்கள்.

News October 10, 2024

Health Tips: பாலூட்டும் பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா?

image

குழந்தைக்கு பாலூட்டும் பெண்கள் உடல் எடையைக் குறைக்க க்ராஷ் டயட் & அதீத உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது என மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரசவத்திற்கு பிறகு தாய்மார்களின் எடை அதிகரிப்பது இயல்பானது. அதைக் கண்டு பயமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. அதீத உடற்பயிற்சி மேற்கொள்வதால் பால் உற்பத்தி குறைவதோடு, அதன் விளைவாக குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுமென அவர்கள் எச்சரிக்கின்றனர்.

News October 10, 2024

பொது அறிவு வினா – விடை

image

1) 3 நிமிடங்கள் மட்டுமே பூத்திருந்து, வாடிவிடும் பூ எது? 2)BBC என்பதன் விரிவாக்கம் என்ன? 3)நோபல், மகசேசே, பாரத ரத்னா ஆகிய 3 விருதுகளையும் பெற்ற ஒரே நபர் யார்? 4) 10 மணிநேரம் மட்டுமே பகல் பொழுதைக் கொண்ட கிரகம் எது? 5)பூனையைப் போல கத்தும்; நாயைப் போல குரைக்கும் பறவை எது? 6)தமிழிசை முன்னோடியான ஆபிரகாம் பண்டிதர் எழுதிய நூலின் பெயர் என்ன? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.

News October 10, 2024

இன்று உலக மனநல தினம்

image

ஆண்டுதோறும் அக்டோபர் 10இல், உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “நல்ல மனநிலையில் உள்ளவர், தன் முழு ஆற்றலையும் உணர்ந்து, தினசரிப் பிரச்னைகளை சமாளித்து, உழைத்து, தான் வாழும் சமுதாயத்தில் முக்கியப் பங்களித்து, தனது வாழ்வை முழுவதுமாக வாழத் தெரிந்தவராக இருப்பார்” எனக் கூறப்பட்டுள்ளது. நீங்க எப்படி? கமெண்ட் பண்ணுங்க.

News October 10, 2024

நாய்க்காக கெளரவத்தையே தூக்கி வீசிய மாமனிதர்..!

image

விலங்குகள் மீது அளப்பரிய அன்பை கொண்டிருந்தவர் ரத்தன் டாடா. ஒருமுறை டாடாவின் சேவைகளை பாராட்டி, அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவித்தார் வேல்ஸ் மன்னர் சார்லஸ். இதற்காக லண்டன் புறப்பட்ட போது, திடீரென அவரது செல்ல நாய்க்கு உடல்நலம் குன்றியது. சிறிதுநேரம் பரிதவித்த டாடா, சட்டென அந்த விழாவுக்கு வர முடியாது என சொல்லி அனுப்பினார். பின்னாளில் இந்த காரணத்தை அறிந்து டாடாவை பாராட்டினார் சார்லஸ்.

News October 10, 2024

நட்சத்திரங்களும் அதற்குரிய அதிதேவதைகளும் (2/2)

image

➤மகம் – சூரிய நாராயணன் ➤ பூரம் – ஆண்டாள் ➤உத்திரம் – மகாலட்சுமி ➤அஸ்தம் – காயத்ரி ➤சித்திரை – சக்கரத்தாழ்வார் ➤சுவாதி – நரசிம்மர் ➤விசாகம் – முருகன் ➤அனுஷம் – நாராயணர் ➤மூலம் – அனுமன் ➤பூராடம் – ஜம்புகேஸ்வரர் ➤உத்திராடம் – கணபதி ➤திருவோணம் – ஹயக்ரீவர் ➤அவிட்டம் – அனந்த சயனப் பெருமாள் ➤ சதயம் – மிருத்யுஞ்ஜேஸ்வரர் ➤பூரட்டாதி – ஏகபாதர் ➤உத்திரட்டாதி – ஈஸ்வரர் ➤ரேவதி – அரங்க நாதன்.

News October 10, 2024

நட்சத்திரங்களும் அதற்குரிய அதிதேவதைகளும் (1/2)

image

ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய அதிதேவதையை வணங்கி வருவதால் அவருக்கு ஏற்படும் தோஷங்கள் விலகும் என்கிறது ஜாதக புராணம். 27 நட்சத்திரங்களுக்குரிய தெய்வங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ➤அஸ்வினி – சரஸ்வதி ➤பரணி – துர்க்கை ➤கார்த்திகை – முருகன் ➤ ரோஹிணி – கண்ணன் ➤மிருகசீரிடம் – ருத்திரன் ➤ திருவாதிரை – சிவன் ➤புனர்பூசம் – ராமர் ➤பூசம் – தட்சிணாமூர்த்தி ➤ஆயில்யம் – ஆதிசேஷன் ➤கேட்டை – வராஹர்.

News October 10, 2024

எதற்கெல்லாம் வெட்கப் படக்கூடாது: ரத்தன் டாடா

image

வாழ்க்கையில் ஒருவர் வெட்கமே படக்கூடாது என்று சில விஷயங்களையும், அதற்கான காரணங்களையும் கூறியிருக்கிறார் ரத்தன் டாடா. 1) பழைய உடைகள். எந்த உடையும் ஒருவரின் திறமையை தீர்மானிக்காது. 2) ஏழை நண்பர்கள். நட்பில் ஸ்டேட்டஸ் என்ற ஒன்றே கிடையாது. 3) அழகில்லாத பெற்றோர். அவர்கள்தான் நீங்கள் இன்று இருப்பதற்கு காரணம். 4) எளிய தோற்றம். வெற்றியை ஒருபோதும் தோற்றம் தீர்மானிப்பதில்லை.

News October 10, 2024

விளையாட்டு துளிகள்

image

➤ஏசியன் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி முதன் முறையாக வெண்கலப் பதக்கம் வென்று, சாதனை படைத்தது. ➤U-19 ஜூனியர் ஆஸி. அணிக்கு எதிரான யூத் டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. ➤ஆசிய யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் கணேஷ் மணி இரு தங்கப் பதக்கங்களை வென்றார். ➤தேசிய பளுதூக்குதலில் 289 கிலோ எடையைத் தூக்கி தமிழக வீரர் முத்துபாண்டி ராஜா புதிய சாதனை படைத்தார்.

error: Content is protected !!