India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து நீக்கியதே தனக்கு தெரியாது என TTF வாசன் தெரிவித்துள்ளார். ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு தரவில்லை என தன்னை நீக்கியதாக இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை போட்டோஷூட் மட்டுமே நடந்திருப்பதாகவும், அதற்கு கூட தானே பணம் செலவு செய்ததாகவும் TTF கூறியுள்ளார். மேலும், பணம் கூட வேண்டாம், நீக்கியதற்கான காரணத்தை மட்டும் கூறுங்கள் என இயக்குநரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. செப்.28ஆம் தேதி 5ஆவது முறையாக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. இதில் 3 பேர் விடுவிக்கப்பட்டு, 4 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 6 அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிய அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கவும், திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது.
சீமான் மீது சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைத்து, விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், நாதகவில் இருந்து விலகியுள்ளார். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை. 2026 தேர்தலுக்கு இப்போதே வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், கட்சி நிர்வாகிகளுக்கு சீமான் உரிய மரியாதை தரவில்லை எனவும் சாடியுள்ளார்.
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது. சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, அனைத்து மாநகராட்சிகளுக்கு உட்பட்ட வட்டங்கள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இப்போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணியளவில் நடைபெறும் இப்போராட்டத்தில், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்பார்கள் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பாதுகாப்பு விதியை மீறியதாக OLA நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்வீஸ், பேட்டரி பிரச்னைகள், அடிக்கடி பழுதாவது என கடந்த ஓராண்டில் 10,644 புகார்கள் குவிந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து வருவதாகவும், OLA நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் CCPA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கபட்டுள்ளது. சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்துவதில் உள்ள தலைமைத்துவ உறுதியையும், விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு இந்த விருதை வழங்கி ஆசிய HRD விருது குழு கெளரவித்துள்ளது. இதற்கு ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார்.
வெள்ளி கோள் குறித்து ஆய்வு நடத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. கோளின் நிலப்பரப்பு குறித்த வரைபடம் தயாரிக்கவும், எரிமலைகளை கண்டறிந்து ஆய்வு நடத்தவும் 19 கருவிகளுடன் கூடிய விண்கலம் ஒன்றை அனுப்பவும் முடிவு செய்துள்ளது. இந்த 19 கருவிகளில் , 3 கருவிகள் சுவீடன், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து உருவாக்கப்பட உள்ளது. கோளின் வளிமண்டல இயக்கவியல், காலநிலை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
அரபிக்கடலில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, நீலகிரி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, கோவை, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அக்.10 – 12 வரை தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அனைத்து வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை அமேசான் நிறுவனம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் NCERT மற்றும் அமேசான் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் அமேசான் NCERT ஸ்டோர்களில் சில்லறை விலையில் புத்தகங்கள் கிடைக்கும் எனவும் அச்சிடப்பட்ட விலைக்கே புத்தகங்கள் விற்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியை, துணை முதல்வர் உதயநிதி விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் தாமதமானதால் பிரதமரை, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து, ரூ.7,425 கோடியை மத்திய அரசின் பங்களிப்பாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் சந்திக்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.