News October 8, 2024
இன்று கனமழை வெளுத்து வாங்கும்

அரபிக்கடலில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இதன்காரணமாக, நீலகிரி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், குமரி, நெல்லை, கோவை, ஈரோடு ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அக்.10 – 12 வரை தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News November 18, 2025
ஊழியர்கள் வேலை நிறுத்தம்; அரசு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில்(SIR) அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பணிச்சுமை அதிகரித்துள்ளதால், இன்று (நவ.18) SIR பணிகளில் ஈடுபடாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ, வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில், SIR பணிகளை புறக்கணித்து விடுமுறை எடுத்தால், ஊதியம் கிடையாது என தலைமை செயலர் முருகானந்தம் எச்சரித்துள்ளார்.
News November 18, 2025
டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா ஒப்புதல்

டிரம்ப்பின் காஸா அமைதி திட்டத்திற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, காஸாவில் மோதலை தடுக்க சர்வதேச படைகள் நிறுத்தப்படும். மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், சர்வதேச நாடுகளின் படைகள் நிறுத்தப்படுவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமையக்கூடும் என ஹமாஸ் எதிர்ப்பு இதற்கு தெரிவித்துள்ளது.