India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த ஆண்டு Oct.07இல் ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திவரும் கண்மூடித்தனமான தாக்குதலின் பாதிப்புகள்: கடந்த ஓராண்டில் 41,870 பேர் பலி, 97,166 பேர் காயம், 25,973 குழந்தைகள் பெற்றோரை இழந்தனர், 114 ஹாஸ்பிடல்கள் அழிப்பு, இஸ்ரேல் சிறைகளில் 13,300 பாலஸ்தீனியர், தொற்றுநோய்க்கு ஆளான 70% மக்கள்… இப்படி துயரம் தொடர்கிறது. இந்த வரிசையில் தற்போது லெபனானும் சேர்ந்துள்ளது.
*மேஷம் – நன்மை உண்டாகும் *ரிஷபம் – பக்தி மேம்படும் *மிதுனம் – வெற்றி தேடி வரும் *கடகம் – சுகம் உண்டாகும் *சிம்மம் – பயம் ஏற்படும் *கன்னி – நஷ்டம் வரும் *துலாம் – பாராட்டு கிட்டும் *விருச்சிகம் – குழப்பம் உண்டாகும் *தனுசு – ஆரோக்கியம் மேம்படும் *மகரம் – ஆர்வமுடன் செயல்படுவீர் *கும்பம் – விவேகத்துடன் செயல்படுவீர்கள் *மீனம் – மேன்மை உருவாகும்.
சென்னையில் ₹45.99 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை CM ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். கண்ணாடி மாளிகை, இசை நீரூற்று, அருவி உள்ளிட்ட அம்சங்களுடன் சுமார் 6.09 ஏக்கர் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது. இந்த பூங்காவை நாளை முதல் காலை 10 – இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ₹100, சிறியவர்களுக்கு ₹50 வசூலிக்கப்படும்.
சாம்சங் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என சாம்சங் இந்தியா CITU தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், உடன்பாடு ஏற்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய அவர், திசை திருப்பும் நடவடிக்கையை CITU வன்மையாக கண்டிப்பதாக கூறினார். உடன்பாடு ஏற்பட்டதாக சாம்சங் அறிவித்தது பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது எனவும் விமர்சித்துள்ளார்.
1. செல்போனில் இருந்து வரும் Blue Light கண்களில் கடும் நீர் வறட்சியை ஏற்படுத்தும். இதனால் கருவிழி பார்வைத் திறனை இழக்கும். 2. ஏராளமான வீடியோக்களை பார்ப்பதால் தேவையில்லாத பல தகவல்கள் மூளையில் ஸ்டோர் ஆகின்றன. இது சிந்தனைத் திறனை குறைக்கிறது. 3. மூளையின் செயல்திறன் குறைவதால் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. 4. தூக்கமின்மை நோயை உருவாக்குவதால் சர்க்கரை, ரத்த அழுத்தம் கூடவே சேர்ந்து விடுகிறது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அண்ணா சாலை, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, நந்தனம், வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி எடுத்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
வங்கதேச அணிக்கெதிரான டி20 போட்டியின் மூலம் மூன்றாண்டுக்குப் பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் வருண் சக்கரவர்த்தி. நேற்றைய போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்ததால் மகிழ்ச்சியாகவும், மறு பிறவி எடுத்தது போலவும் உணர்கிறேன் என்றார். மேலும், TNPL தொடரில் விளையாடியது திறமையை வளர்க்க உதவியதாக கூறினார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், திமுகவை தொடர்ந்து சீண்டி வருகிறார். நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், “எனது தந்தை சென்னையில் இருக்கும் பாபாஜி ஆசிரமத்துக்கு அடிக்கடி செல்வார். பக்தி பாரம்பரியத்தில் சிறந்த விளங்கும் பூமி தமிழ்நாடு. சித்தர்கள் மற்றும் மகான்களின் பூமி தமிழ்நாடு” எனக் கூறினார். தமிழ்நாட்டை திராவிட பூமி என திமுக கூறும் நிலையில், சித்தர்களின் பூமி என பவன் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும் ஓரம்கட்டி, TRPஇல் உச்சத்தை தொடும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கிவருவது தெரிந்ததே. பிக் பாஸ் 18 சீசனில் Weekend Ka Vaar என்ற பெயரில் சல்மான் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தொகுத்து வழங்குவார் என அறியமுடிகிறது. ஒருநாள் ஷூட்டிங்கிற்கு ₹12 கோடி (சீசனுக்கு ₹250 கோடி) சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி முதன்முறையாக பதவியேற்ற தினம் இன்று. இதனைக் கொண்டாடும் விதமாக குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது: குஜராத் முதல்வராக அக்.7 2001-இல் பதவியேற்றேன். முதல்வராகவும், பிரதமராகவும் அரசை நிர்வகிக்கும் பொறுப்புக்கு நான் வந்து 23 ஆண்டுகள் ஆகின்றன. என்னை போன்ற சாதாரண காரியகர்த்தாவுக்கு தலைமை பொறுப்பை வழங்கி அழகுபார்ப்பதே பாஜகவின் பெருந்தன்மை” எனக் கூறினார்.
Sorry, no posts matched your criteria.