News October 7, 2024

Big Boss 18: சல்மான் கானுக்கு இவ்வளவு சம்பளமா?

image

ஹிந்தி டிவி நிகழ்ச்சிகளை ஒவ்வொரு ஆண்டும் ஓரம்கட்டி, TRPஇல் உச்சத்தை தொடும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தொகுத்து வழங்கிவருவது தெரிந்ததே. பிக் பாஸ் 18 சீசனில் Weekend Ka Vaar என்ற பெயரில் சல்மான் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் தொகுத்து வழங்குவார் என அறியமுடிகிறது. ஒருநாள் ஷூட்டிங்கிற்கு ₹12 கோடி (சீசனுக்கு ₹250 கோடி) சம்பளமாக வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 9, 2025

டாப்-7 சிறந்த விளையாட்டு திரைப்படங்கள்!

image

இந்திய திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் டாப்-7 சிறந்த படங்களின் பட்டியலை கொடுத்துள்ளோம். இவற்றில் சில படங்களை நீங்கள் ஏற்கெனவே பார்த்திருக்கலாம். படங்களின் விவரத்தை SWIPE செய்து தெரிந்து கொள்வதுடன், பார்க்காதவற்றை தவறாமல் OTT-ல் பார்க்கவும்.

News November 9, 2025

நவம்பர் 9: வரலாற்றில் இன்று

image

*1896-நாதசுவரக் கலைஞர் பி.எஸ்.வீருசாமி பிள்ளை பிறந்தநாள். *1959-வீணைக் கலைஞர் ஈ.காயத்ரி பிறந்தநாள். *1965-நடிகர் வேணு அரவிந்த் பிறந்தநாள். *1988-தேங்காய் சீனிவாசன் மறைந்த நாள். *1998-பி.எஸ்.வீரப்பா மறைந்த நாள். *2006-எழுத்தாளர் வல்லிக்கண்ணன் மறைந்த நாள். *2024-நடிகர் டெல்லி கணேஷ் மறைந்த நாள்.

News November 9, 2025

பூதத்தின் பிடியில் தமிழ் சினிமா: கஸ்தூரி

image

தமிழ் திரையுலகம் ஒரு பூதத்தின் பிடியில் இருப்பதாக கஸ்தூரி விமர்சித்துள்ளார். பாஜக மாநில கலை & கலாசார பொதுக்குழுவில் பேசிய அவர், தமிழ் திரையுலகம் ஒரு சாராரிடம் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார். அது மொத்த ஊரிடம் இருந்தால் மட்டுமே அதன் வளர்ச்சி நன்றாக பரிணமிக்கும் என்றும், திரைத்துறையை விடுவிப்பதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் கஸ்தூரி பேசியுள்ளார்.

error: Content is protected !!