India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
◙மேஷம் – விருப்பம்
◙ரிஷபம் – ஜெயம்
◙மிதுனம் – நிம்மதி
◙கடகம் – சாந்தம்
◙சிம்மம் – அமைதி
◙கன்னி – பாசம்
◙துலாம் – அன்பு
◙விருச்சிகம் – முயற்சி
◙துனுசு – பாராட்டு ◙மகரம் – ஆர்வம்
◙கும்பம் – உதவி ◙மீனம் – பக்தி
மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கையை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 172/3 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது இந்திய அணி.
BAN-க்கு எதிரான 2ஆவது T20 போட்டியில் IND அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த IND, 221 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய BAN அணி முதல் ஓவரில் அதிரடியாக விளையாடியது. ஆனால், 3ஆவது ஓவருக்கு பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த BAN, 20 ஓவரில் 135/9 ரன்கள் மட்டுமே எடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால், 2 -0 என்ற கணக்கில் IND தொடரை கைப்பற்றியது.
தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்து, இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு அருகே 21 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். மீனவர்கள் கைதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, CM ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை.
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது T20 போட்டியின் கடைசி ஓவரை வங்கதேச வீரர் ரிஷாத் ஹொசைன் அசத்தலாக வீசினார். 19 ஓவருக்கு 213 ரன்கள் குவித்த இந்தியா, கடைசி ஓவரில் சிக்ஸர் மழை பொழியும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் ஆகிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி ரிஷாத் ஹொசைன் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி, மெர்சல் செய்தார்.
தமிழ்நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிலிண்டர் டெலிவரி செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிலிண்டரை முன்கூட்டியே புக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.
மகளிர் T20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய ஸ்மிருதி மந்தனா 50, ஃஷபாலி வர்மா 43, ஹர்மன்ப்ரீத் கவுர் 52* ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் சமாரி அட்டபத்து, அமா கஞ்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இலங்கைக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
‘GOAT’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், இதுவரை உலகம் முழுவதும் ₹455 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் சமீபத்தில் OTTயில் வெளியான நிலையில், அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இருப்பினும் ‘லியோ’ படத்துடன் ஒப்பிடுகையில் ‘GOAT’ குறைவாகவே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நீங்கள் பார்த்துவிட்டீர்களா?
வங்கதேசத்திற்கு எதிரான T20 போட்டியில் சரவெடியாக வெடித்த ரிங்கு சிங் 26 பந்துகளில் அரை சதம் (53*) அடித்துள்ளார். வங்கதேசத்தின் பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்த அவர், 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசினார். இது T20 போட்டியில் அவர் அடிக்கும் மூன்றாவது அரை சதமாகும். தற்போது வரை இந்தியா 16 ஓவர்களில் 182/4 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா எவ்வளவு ரன்கள் எடுக்கும்?
தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிக கனமழையும், 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, வேலூர், தி.மலை, தருமபுரி, கரூர், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.