News October 9, 2024

இந்த தேதியில் சிலிண்டர் கிடையாது

image

தமிழ்நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிலிண்டர் டெலிவரி செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சிலிண்டரை முன்கூட்டியே புக் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.

Similar News

News November 7, 2025

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அறிவிப்பு

image

<<18228875>>சென்னையை<<>> தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் இயங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், நாளை(நவ.8) பள்ளிகள் செயல்படாது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம்.

News November 7, 2025

இந்திய அணிக்கு குட்பை சொல்ல சுனில் சேத்ரி தயார்

image

இந்திய கால்பந்தின் நம்பிக்கை நாயகனாக வலம் வந்த சுனில் சேத்ரி, கடந்த ஆண்டே தனது ஓய்வை அறிவித்தார். ஆனால் இந்திய அணிக்கு அவரின் தேவை இருந்ததால், பயிற்சியாளரின் அழைப்பை ஏற்று மீண்டும் அணியில் சேர்ந்தார். 2027 ஆசிய கோப்பைக்கு தகுதி பெற அவர் எடுத்த முயற்சிகள் அணிக்கு கைகொடுக்கவில்லை. இதனால் இந்திய அணிக்கு குட் பை சொல்ல சுனில் சேத்ரி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 7, 2025

உங்கள் தினசரி உணவில் பூண்டு இருக்கா?

image

பூண்டு சாப்பிட பிடிக்குமா? தினமும் உங்கள் உணவில் சேர்க்க மறக்காதீங்க. உணவுடன் சேர்த்து அல்லது வெறுமனே 2 முதல் 3 பூண்டு பற்கள் சாப்பிடுவது நல்லது. இது, உடலுக்கு தேவையான பல நன்மைகள் தரும் ஒரு இயற்கை மருந்து. இதனை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து தெரிஞ்சுகோங்க. இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!