News October 10, 2024

BREAKING: விடைபெறுகிறார் ரபேல் நடால்

image

பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால் (38 வயது) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 14 பிரெஞ்சு ஓபன் பட்டம் உள்பட மொத்தம் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நடால், களிமண் ஆட்டக் களத்தில் வெல்ல முடியாதவர் எனப் பெயர் எடுத்தவர். அண்மைக்காலமாக தொடர் காயங்களால் திணறிவரும் இவர், வரும் நவம்பரில் டேவிஸ் கப் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

News October 10, 2024

ரஜினி உருக்கமாக இரங்கல்

image

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உண்மையான மகனை நாம் இழந்துள்ளோம். பல தலைமுறைகளுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர். அனைவராலும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மனிதர் ரத்தன் டாடா என புகழாரம் சூட்டியுள்ளார்.

News October 10, 2024

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் வீரர்கள்

image

காஸாவில் ஹமாஸ் இயக்கத்திடம் பிணை கைதிகளாக இருக்கும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை விடுவிக்க காஸாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று 100-க்கு மேற்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை போர்முனைக்கு செல்ல மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். உண்மையில் பிணைக்கைதிகள் பற்றி இஸ்ரேல் அரசு கவலைப்பட்டிருக்கும் எனில், எப்போதே போர் நிறுத்தம் செய்திருக்கும் இல்லையா?

News October 10, 2024

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவரா?

image

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் தைரியம், தர்ம சிந்தனை கொண்டவராக இருப்பீர்கள் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அனைத்துத் தரப்பினரிடமும் எந்தப் பேதமும் இல்லாமல் பழகுவீர்கள் நீங்கள் அதே நேரத்தில் முன்கோபியாகவும் இருப்பீர்கள். உலகமே எதிர்த்தாலும் நினைத்ததை முடிக்கும் மன உறுதி கொண்டிருப்பீர்கள் என்கிறது நந்தி வாக்கியம். இவை உங்கள் குணங்களோடு ஒத்துப்போகிறதா என கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 10, 2024

தமிழகத்தில் அக்.15 வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அக்.15 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என, வானிலை மையம் முன்னறிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்றும் கணித்துள்ளது. நாளை திருச்சி, கரூர்,சேலம், தி.மலை, வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, நெல்லை, குமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News October 10, 2024

சினிமாவில் தோற்ற டாடா

image

Automobile முதல் IT வரை பலதுறைகளில் சாதனைகள் படைத்த டாடா தோற்றது ஒரே துறை சினிமா தான். 2004-ல் டாடா BSS என்ற நிறுவன பெயரில் ஜதின் குமார் என்பவருடன் இணைந்து ஏத்பார் (Aetbaar) என்ற இந்தி படத்தை தயாரித்தார். அமிதாப், ஜான் ஆப்ரஹாம், பிபாஷா என நட்சத்திரங்கள் நடித்திருந்தும், ரூ.9.5 கோடி பட்ஜெட்டில் தயாரான அந்த படம் 8 கோடி மட்டுமே வசூலித்தது. அதன்பின் படம் தயாரிப்பதை டாடா நிறுத்திக் கொண்டார்.

News October 10, 2024

கதாநாயகனாக மீண்டும் களமிறங்கும் மிஷ்கின்?

image

அஞ்சாதே, பிசாசு, சைக்கோ உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் இயக்குநர் மிஷ்கின். அஞ்சாதே உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கிய அவர் நந்தலாலா படத்தை இயக்கியதுடன் அதில் நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில், அவர் மீண்டும் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குநர் கோகுல் இயக்கவுள்ள இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

News October 10, 2024

TEAM INDIA: வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்

image

2024ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கான ஆண்டாகவே மாறி இருக்கிறது. ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போதுவரை TEST & T20 என இரண்டிலும் இந்தியா தொடர் வெற்றி பெற்று வருகிறது. இந்த ஆண்டு 8 டெஸ்டில் விளையாடிய இந்திய அணி 7இல் வெற்றி பெற்றது. மறுபுறம், 21 T20 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது. அதே நேரத்தில், விளையாடிய 3 ODI போட்டிகளில் இரண்டில் தோல்வியைத் தழுவியுள்ளது.

News October 10, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 11 மணிக்கு <<14320637>>GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) பார்லிப் பூ 2) British Broadcasting Corporation 3) அன்னை தெரசா 4) வியாழன் 5) கிவி பறவை 6) கருணாமிருத சாகரம். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 10, 2024

வர்த்தக சாம்ராஜ்யத்தை வழிநடத்தப்போவது யார்?

image

ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு, அவர் கட்டுப்பாட்டில் இருந்த வர்த்தக சாம்ராஜ்யத்தை ( ₹3,800 கோடி) அடுத்ததாக யார் வழிநடத்த உள்ளார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த ரேஸில் நோயல் டாடா (ஒன்றுவிட்ட சகோதரர்), நெவில் டாடா, லியா டாடா, மாயா டாடா ஆகியோர் உள்ளனர். இவர்களில் டாடா குழுமத் தலைவராகும் வாய்ப்பு நோயலுக்கு அதிகம் உள்ளதாக தொழில்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

error: Content is protected !!