India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ரயில்வேயில் (வடக்கு) காலியாகவுள்ள 5,647 பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அப்ரென்டிஸ் நிலையிலானவை ஆகும். இதில் எஸ்சி பிரிவினருக்கு 879, எஸ்டி பிரிவினருக்கு 435 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு ரயில்வே ஆட்தேர்வு இணையதளத்தில் நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க டிச.3ஆம் தேதி கடைசி நாளாகும். இந்தத் தகவலை பகிருங்கள்.
IPL தொடர் பலரின் வாழ்க்கையை பெரிதளவில் மாற்றிவிடுகிறது. இவர் 2013ல் U-19 தொடரில் விளையாடி, கவனத்தை ஈர்த்தார். 2015’ல் இந்திய அணிக்காக விளையாட துவங்கியவர், தற்போது T20Iல் தொடர்ந்து 2 முறை சதம் விளாசிய வீரராக சாதனை படைத்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.80 கோடி. காரணம், ராஜஸ்தான் அணி இவருக்கு IPL தொடரில் அளிக்கும் சம்பளம் தான். அவர் யாரென்றால் சஞ்சு சாம்சன் தான். Happy Birthday Sanju….
அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட பல கோயில்களில் மீது தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் தீவிரவாதி பன்னுன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தடை செய்யப்பட்ட சீக்கியர்கள் நீதிக்கான அமைப்பு (SFJ) வெளியிட்ட வீடியோவில், நவ. 16-17ல் இத்தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும், இந்து சித்தாந்தம் பிறந்த அயோத்தியின் அடித்தளம் அசைக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது இந்தியா.
நடிகை கஸ்தூரியை சென்னை போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், எழும்பூர் காவல்நிலையத்தில் கஸ்தூரி மீது வழக்குப்பதியப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சம்மன் அளிக்க கஸ்தூரி வீட்டுக்கு போலீஸ் சென்றபோது பூட்டிக் கிடந்தது. இதனிடையே, ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி கஸ்தூரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
CSK அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். பந்தை சுவிங் செய்யும் வீரர்களை சென்னை அணி விரும்பும் என்பதால், ஆண்டர்சன் அதற்கு சரியான தேர்வாக இருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆண்டர்சன் கடைசியாக 2014ஆம் ஆண்டில் டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின்னர் டி20 போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
அழகை அளக்க முடியும் என்றால் நம்புவீர்களா? முடியும் என்கிறார் முக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் ஜூலியன் டி சில்வா. அதற்காக Golden Ratio என்கிற பார்முலா உள்ளதாம். முகத்தின் அளவு -அமைப்பு, கண், மூக்கு, தாடை போன்றவற்றை அளந்து இந்த Golden Ratio அவர் கணக்கிடுகிறார். அதன்படி, தற்போது அதிகபட்சமாக 1.62 புள்ளிகளை பெற்று பிரிட்டன் நடிகையான ஜோடி கமர் என்பவர் தான் உலகின் அழகான பெண் என்றும் கூறுகிறார்கள்.
அண்ணாமலை போன்ற கீழ்த்தரமான அரசியல்வாதிகள் இருக்கும் பாஜகவில் தொடர விரும்பவில்லை என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். மோடி அழைத்தார் என்பதற்காகவே பாஜகவில் இணைந்தேன், தன்னை கட்சியிலிருந்து நீக்க அண்ணாமலை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தார் முடியவில்லை என்றார். இனி அரசியலில் ஈடுபட போவதில்லை என குறிப்பிட்ட அவர், ஒரு இந்தியனாக, தமிழனாக, திராவிடனாக தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.
பிரபல தொழிலதிபர் வி.கே.டி. பாலன் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிபரான வி.கே.டி. பாலன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர். பயண சுற்றுலாத் துறையின் முன்னோடியாக விளங்கிய இவர், கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். அவரது இறுதிச் சடங்கு மந்தவெளியில் நாளை நடைபெறுகிறது.
இங்கிலாந்தை சேர்ந்த மால்கம் (48) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டில் வளர்ப்பதற்காக ‘கோய் கார்ப்’ என்ற வகை மீன்களை வாங்கியுள்ளார். நிறத்தை மாற்றுவதில் பெயர்போன அந்த மீன்களை தனது வீட்டுக்குளத்தில் விட்டபோது ஒரு மீன் மட்டும் மனித முகத்துடன் காணப்பட்டது. இந்த தகவலை அறிந்த அக்கம்பக்கத்தினர் மீனை பார்ப்பதற்காக மால்கம் வீட்டிற்கு படையெடுத்து வருகின்றனர். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
ஊழல் ஆட்சியை நடத்தும் பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என செல்வப்பெருந்தகை சாடியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற ராகுலின் கோரிக்கையை மடைமாற்றும் விதமாக, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த மோடி முயல்வதாகவும் குற்றஞ்சாட்டிய செல்வப்பெருந்தகை, மக்களுக்காக தன்னை வருத்திக்கொண்டு 10,000 கிமீ நடந்த ராகுலை விமர்சிக்க மோடிக்கு தகுதியில்லை என்றார்.
Sorry, no posts matched your criteria.