India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால், அணு ஆயுதங்களை பிரயோகிக்க தனது ராணுவத்திற்கு, ரஷ்ய அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளார். அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்த அந்நாடு அனுமதி அளித்துள்ளது. இதனால் போர் தீவிரமடையும் என எச்சரித்துள்ள புதின், உக்ரைன் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று, போர் தொடங்கிய 1,000வது நாளான இன்று, அதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனத்தை, CM ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தொடங்கியுள்ளார். திமுகவிற்கு பின்புலமாக செயல்பட்ட நிலையில், விண்வெளி துறையில் அவர் காலடி பதித்துள்ளார். சபரீசனின் சகோதரர் ஹரிஹரன் மற்றும் சமீர் பாரத் ராம் ‘வானம்’ நிறுவனத்தை தொடங்கினாலும், சபரீசனை சார்ந்தே இயங்கும் என தெரிகிறது. ISRO முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணின் ஆலோசனையில் இந்நிறுவனம் செயல்பட உள்ளது.
இபிஎஸ்க்கு உதயநிதி சவால் விடுத்ததற்கும், அவரை விமர்சித்ததற்கும் பதிலடி கொடுத்து ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “இபிஎஸ்சை விமர்சித்தால் தனக்கு விளம்பரம் கிடைக்கும் என்ற நப்பாசையில் அந்த விஷக் கொடுக்கு, வாய்க்கு வந்ததையெல்லாம் உளறித் திரியும் உதவா நிதிக்கு, நாவடக்கம் தேவை” என சாடியுள்ளார். வாரிசு அடிப்படையில் துணை முதலமைச்சரான ஒட்டுண்ணி உதயநிதி எனவும் விமர்சித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், பாகிஸ்தானில் சென்று விளையாடமாட்டோம் என BCCI கூறிய நிலையில், இந்த விஷயத்தில் பாக்., கிரிக்கெட் வாரியம் மவுனம் சாதித்து வருகிறது. இந்நிலையில் ICC நேரடியாக களமிறங்கி பாக்., கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தெரிகிறது. விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது.
விமானம் குறித்த அடிப்படை தத்துவத்தை முதலில் கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் அல்ல, பரத்வாஜ் முனிவர் என உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். லக்னோவில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி யுனிவர்சிட்டியின் 9வது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், பண்டைய இந்தியாவில் முனிவர்கள் பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்துள்ளனர் எனக் கூறினார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
தனுஷ் – நயன் மோதல் விவகாரத்தில் அடுத்தடுத்து பாடகி சுசித்ரா பரபரப்பு தகவல் வெளியிட்டு வருகிறார். பேட்டி ஒன்றில், தனுஷ் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளதாகவும், இந்த படங்களில் நடித்த நடிகைகள் 150 பேருக்கு பாலியல் ரீதியாகவும், பர்சனலாகவும் தொல்லை கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். “யாரடி நீ மோகினி” படத்தில் நடித்தபோது நயனுக்கும் அவர் தொல்லை கொடுத்தார் எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 15 ஆண்டுகளாக சீன மாணவர்கள் அதிகளவில் படித்த நிலையில், 2023-2024ல் அவர்களை விஞ்சி இந்தியா சாதனை படைத்துள்ளது. அங்கு படிக்கும் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் 3.31 லட்சம் பேர் (29.4%) இந்திய மாணவர்கள் ஆவர். அதேசமயம், USல் பயிலும் சீன மாணவர்களின் எண்ணிக்கை 2.74 லட்சமாக சரிந்துவிட்டதாக அந்நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெங்கால் திரையுலகில் பிரபலமான நடிகை மூன் மூன் சென்னின் கணவர் பாரத் தேவ் வர்மா உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது(83). நடிகை மூன் மூன் சென் வீட்டிற்கு நேரில் சென்ற மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாரத் தேவ் வர்மாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மறைந்த பாரத் தேவ் வர்மாவுக்கு ரைமா, ரியா சென் என்ற இரு மகள்கள் உள்ளனர்.
திருச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள ஆய்வு கூட்டம் இன்று(நவ.19) நடைபெற்றது. அதில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவை இபிஎஸ் சிறப்பாக வழிநடத்தி வருவதாக புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், 2017ல் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் நடந்த வேலையில் நீதிமன்றத் தீர்ப்பால் சிறைக்கு சென்றுவிட்டார். அவரை முதல்வராக வரவிடாமல் இறைவன் தடுத்துவிட்டார் என்றும் கூறினார்.
2011ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோதே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் UPA அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஞ்சியில் பேட்டியளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரஸ் கூட்டணியின் சிந்தனையில் உதித்த குழந்தை. அதை அமல்படுத்தாதது தவறு என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். ராகுலின் கருத்து குறித்த உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.
Sorry, no posts matched your criteria.