India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்திற்கு ம.பி. பாஜக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. கடந்த 15ஆம் தேதி வெளியான இப்படம், திட்டமிட்ட அரசியல் பிரசாரப் படம் என்ற விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக ம.பி. முதல்வர் மோகன் யாதவ் விமர்சித்துள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி இப்படத்தை பாராட்டியிருந்தார்.
நவ.26 முதல் தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக வருவாய்த் துறை அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. 2023இல் ஸ்டிரைக் செய்தபோது அமைச்சர்கள் பேச்சு நடத்தி, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை அக்கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, 26ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
போதிய தெரு விளக்கு இல்லாததால் கடந்த 6 ஆண்டுகளில் ஒரே பகுதியில் நிகழ்ந்த 542 விபத்துகளில் 137 பேர் பலியான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஐகோர்ட் மதுரைக் கிளையில் சமயநல்லூர் டிஎஸ்பி தாக்கல் செய்த அறிக்கையில், மதுரை பாத்திமா கல்லூரி முதல் சமயநல்லூர் வரை உள்ள சாலையில் போதிய தெருவிளக்கு இல்லாததால் அதிக அளவிலான விபத்துகள் நிகழ்ந்து உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளதாக க்ரெம்ளின் மாளிகை பத்திரிக்கை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். எந்த தேதிகளில் அவர் பயணம் மேற்கொள்வார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியா என்ன செய்ய வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தருவதாகவும், இந்தியா-சீனா இடையிலான உறவு சிக்கல்களை தீர்க்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘Alphabet வடிவில் உங்கள் முன் வருகிறேன்’ எனப் புடவையில் நடிகை ஸ்ரீலீலா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா-2’ திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடிகை ஸ்ரீலீலா சிறப்புத் தோற்றத்தில் குத்தாட்டம் போடும் காட்சிகளை டிரைலரில் இருந்து எடிட் செய்து அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
GPAY, PHONE PE உள்ளிட்ட UPI வசதியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். அவர்களின் போன் நம்பரை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பணம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றி மத்திய அரசின் NATIONAL PAYMENT CORPORATION எச்சரிக்கை விடுத்துள்ளது. யாரேனும் சுங்கத்துறை, காவல்துறை அதிகாரிகள் என்று கூறி, பணம் கேட்டு மிரட்டினால் காவல்நிலையம், 1930-க்கு தகவல் தெரிவிக்கும்படி வலியுறுத்தியுள்ளது.
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் கேரள அரசு ‘சுவாமி சாட்போட்(Swami Chatbot) வாட்ஸ்அப் செயலியை உருவாக்கியுள்ளது. ஐயப்ப பக்தர்களுக்கு தரிசன நேரம், காவல், மருத்துவம், தீயணைப்பு உள்ளிட்ட உதவிகளை 24 மணிநேரமும் வழங்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 6238008000 என்ற எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால், பக்தர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.
தனுஷ் எந்தெந்த நடிகைகளுக்கு தொல்லை கொடுத்தார் என்ற விவரத்தை சுசித்ரா வெளியிட்டுள்ளார். யாரடி நீ மோகினியில் நயன்தாராவுக்கு தொல்லை கொடுத்ததாகவும், நஸ்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமாவுக்கும் தொல்லை கொடுத்துள்ளார் எனவும் சுசித்ரா குறிப்பிட்டுள்ளார். சுசித்ரா குறிப்பிட்ட நடிகைகள், நயன்தாரா பதிவுக்கு ஆதரவாக லைக் செய்திருந்தனர். அதில் ஐஸ்வர்யா முதலில் லைக் செய்தார். பிறகு எடுத்து விட்டார்.
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, LIC இணையதளம் ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் வரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹிந்தி மொழி மட்டுமே இருந்ததாகவும் LIC விளக்கமளித்துள்ளது. முதலில் மொழித்தேர்வில், ஆங்கிலமும் ஹிந்தியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மொழித்தேர்வில் English என மாற்றப்பட்டுள்ளது. எனினும், முகப்பு பக்கம் ஹிந்தியிலேயே இருக்கிறது.
திருமண ஆல்பத்தில் “நானும் ரவுடிதான்” பட காட்சியை பயன்படுத்த அனுமதி கேட்டு 2 ஆண்டுகள் காத்திருந்ததாக தனுஷ் மீது நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர் என்றும் சாடியிருந்தார். இதற்கு தனுஷ் இதுவரை பதில் அளிக்காத நிலையில், அவரின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா பதில் அளித்துள்ளார். நயன் சொல்வது எல்லாம் பொய் என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.