News October 20, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14404536>>GK <<>>வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) பெஸ்சன்டன் 2) ஆந்திரப் பிரதேசம் 3) மின்மினிப் பூச்சி 4) அலுமினியம் 5) National Investigation Agency 6) தென் ஆப்பிரிக்கா 7) மீன். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 20, 2024

இந்தியாவில் 36 ஆண்டுகளுக்கு பின் முதல் வெற்றி

image

இந்திய மண்ணில் 36 ஆண்டுகளுக்கு பிறகு, டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது. 1988ஆம் ஆண்டில் மும்பையில் நியூசி. கடைசியாக இந்திய அணிக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பிறகு அந்த அணி எந்த வெற்றியையும் பெறாமல் இருந்தது. அந்தத் தாகத்தை பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து அணி தணித்துள்ளது.

News October 20, 2024

காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

image

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி வட மேற்கு திசையில் நகர்ந்து வரும் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

News October 20, 2024

20 மாவட்டங்களில் இன்று கனமழை!

image

வட கடலோர மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

News October 20, 2024

அதிக வேலை நேரம்… அரசுக்கு மருத்துவர்கள் கோரிக்கை!

image

ஊழியர்களிடையே அதிகரித்து வரும் பணி அழுத்தத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலகளவில் வாரத்திற்கு 49 மணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றும் ஊழியர்களில் இந்தியர்கள் (சராசரியாக 46.7 மணிநேரம்) 2ஆம் இடத்தில் உள்ளனர். அதிக வேலைப்பளு, மன அழுத்தம், பணியிடப் பிரச்னை காரணமாக ஏற்படும் ஊழியர்களின் இறப்பு எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

News October 20, 2024

கோர விபத்து: சம்பவ இடத்திலேயே 11 பேர் பலி

image

ராஜஸ்தானில் இன்று கோர விபத்து நிகழ்ந்தது. ஜெய்ப்பூரில் இருந்து 50 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று டோல்பூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. டோல்பூர் அருகே அதிகாலை வந்த போது, எதிரே வந்த டெம்போ வேனுடன் பஸ் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் டெம்போவில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்தவர்கள் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News October 20, 2024

தமிழகத்தில் 65% கூடுதல் மழை பதிவு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 65% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் இன்று காலை வரை இயல்பாக 65 மி.மீ. மழை பெய்ய வேண்டிய இடத்தில் 156.7 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இயல்பை விட 177% கூடுதலாக மழை பெய்துள்ளது. வழக்கமாக பெய்யும் 122.4 மி.மீ மழைக்கு பதிலாக 338.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

News October 20, 2024

தீபாவளி: சரசரவென இறங்கிய சிறப்பு ரயில்கள்!

image

தீபாவளியை முன்னிட்டு அக்.25 முதல் நவ.5 வரை 35-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மட்டும் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்களிலும், ரயில்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் ஆம்னி பஸ்களையும், விமானங்களையும் மட்டுமே மக்கள் நம்பி இருந்தனர். இந்நிலையில், இந்த சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

‘கங்குவா’ இசை வெளியீட்டு விழா… படக்குழு அறிவிப்பு

image

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26ஆம் தேதி நடைபெறும் என படக்குழு அறிவித்துள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சரித்திர பின்னணியில், 3D தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படம் தமிழ், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

News October 20, 2024

BREAKING: இந்தியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

image

IND அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என NZ அணி முன்னிலை பெற்றது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் NZ அணி தனது 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 5ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது அதில் யாங் (48*), ரச்சின் ரவீந்திரா (39*) இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இதனால் NZ அணி 27.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து அபார வென்றது.

error: Content is protected !!