News October 20, 2024

மூலிகை கொசு விரட்டி லோஷன்!

image

டெங்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கெமிக்கல் கிரீம்களை நம்மில் பலர் பயன்படுத்துகிறோம். சருமத்தில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அவற்றுக்கு பதிலாக, இயற்கையான லோஷனை வீட்டிலேயே நாம் தயாரித்து பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்யை ஒரு கரண்டியில் ஊற்றி, சூடாக்கி, அதில் கற்பூரம் சேர்த்தால் கரைந்துவிடும். சூடு குறைந்ததும் அதை உடலில் தேய்த்தால் கொசுக்கள் நம்மை நெருங்காது.

News October 20, 2024

டாஸில் தோற்றதே வெற்றிக்கு காரணம்: டாம் லாதம்

image

டாஸில் தோல்வியை சந்தித்ததே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக நியூசி. கேப்டன் டாம் லாதம் தெரிவித்துள்ளார். டாஸில் வென்றிருந்தால் தாங்களும் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்போம் என்ற அவர், பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி இந்தியாவை கட்டுக்குள் கொண்டுவந்ததாக குறிப்பிட்டார். 3ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.

News October 20, 2024

நாளை மாலை… சிம்பு கொடுத்த அப்டேட்

image

மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ள சிம்பு தான் நடிக்கும் அடுத்த படம் தம்+ மன்மதன்+ வல்லவன்+ VTV கலந்த கலவையாக இருக்கும் என கூறியிருந்தார். இந்நிலையில், அப்படத்தின் அறிவிப்பு சரியாக நாளை மாலை 6:06 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். ‘டேய் 2k kids , 90’s moodல நாளைக்கு வரேன்’ என X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை சிம்பு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

News October 20, 2024

உலகப்புகழ் பெற்ற கோயிலில் திருடிய டாக்டர்

image

உலகப்புகழ் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் கடந்த வியாழக்கிழமை திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. பூஜைக்கு பயன்படுத்தப்படும் வெண்கலத்தால் ஆன தட்டு திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஹரியானாவில் பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்தனர். இதில் ஒருவர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற டாக்டர் என தெரியவந்துள்ளது. அவர்களிடன் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News October 20, 2024

WT20 WC Final: நியூசிலாந்து அணி பேட்டிங்

image

மகளிர் T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி பவுலின் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் நியூசி., பேட்டிங்கை செய்ய உள்ளது. இதுவரை இரு அணிகளுமே T20 உலகக் கோப்பையை வென்றதில்லை. இன்று எந்த அணி வெற்றிபெறும் என நினைக்கிறீர்கள்?

News October 20, 2024

ஆளுநருக்கு ஆதரவுக்கரம் நீட்டிய OPS

image

தமிழ்த்தாய் பாடப்பட்ட விவகாரத்தில், ஆளுநர் R.N.ரவியை வசைபாடுவதை ஏற்க முடியாது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். திராவிடநல் திருநாடு வரி விடுபட்டது மிகப்பெரிய தவறு எனக் குறிப்பிட்ட அவர், DD தமிழ் நிர்வாகம் செய்த தவறுக்கு ஆளுநர் எப்படி பொறுப்பாக முடியும் என வினவியுள்ளார். மேலும், செய்த தவறை DD தமிழ் ஒப்புக்கொண்ட பிறகும், அரசியல் விளம்பரத்திற்காக விமர்சனம் செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News October 20, 2024

கிராபிக்ஸ் பணிகளால் தள்ளிப்போகும் எல்.ஐ.கே ரிலீஸ்

image

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி(L.I.K) படத்தின் கிராபிக்ஸ் பணிகள் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக படக்குழு கூறியுள்ளது. ‘லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். இப்படம் இந்த வருடமே வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தொழில்நுட்ப பணிகள் காரணமாக 2025 மே மாதம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

News October 20, 2024

விசிக ஆட்சி அதிகாரத்துக்கு வரும்: வன்னி அரசு

image

விசிக ஒருநாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும் என்று விசிகவின் வன்னி அரசு தெரிவித்துள்ளார். அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுச் சட்டத்தை கொண்டு வந்தபோது ஆதரித்தது விசிகதான். விசிகவினருக்கு பாஜகவில் இருந்து யாரும் பாடம் எடுக்க முடியாது என்று எல்.முருகனை சாடிய அவர், விசிகவின் நிலைப்பாடு உள் ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல; கிரிமிலேயருக்கு எதிரானது என கூறியுள்ளார்.

News October 20, 2024

நாம் தமிழர் ஆட்சியில் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து: சீமான்

image

அமைச்சர் அன்பில் மகேஷ் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். யார் திராவிடர்? என்று விவாதிக்க தயாராக இருப்பதாகவும், அமைச்சர் அன்பில் மகேஷ் ஒத்துக்கொண்டால் விவாதத்தை எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். தனது ஆட்சியில் புதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் உருவாகும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

News October 20, 2024

நாளை ஆர்.ஜே.பாலாஜியின் சொர்க்கவாசல் டீசர்

image

சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி அரும் திரைப்படம் சொர்க்கவாசல். இப்படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு அனிரூத் வெளியிடுகிறார். ஏற்கெனவே வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில், மத்திய சிறைச்சாலை மெட்ராஸ் #002573 1999 என்று எழுதப்பட்ட ஸ்லேட் ஒன்றை கையில் பிடித்தபடி ஆர்.ஜே.பாலாஜி நின்று கொண்டிருந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

error: Content is protected !!