India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மழைக்காலத்தில் பைக் ஸ்டார்ட் ஆவதில் பிரச்சனை வருவது சகஜம். குளிர்ச்சியால் இன்ஜின் ஆயில் தானாக இறுகுவதும், பேட்டரி பவர் குறைவதுமே இதற்கு காரணமாகும். இதற்கு கீழ்காணும் வழிகளில் தீர்வு காணலாம். *பைக்கில் உள்ள சோக்-ஐ இழுத்துவிட்டு, ஸ்டார்ட் செய்தால் உடனே ஸ்டார்ட் ஆகும். *ஆக்சிலேட்டரை முறுக்காமல் காலால் கிக்கரை அழுத்தி மிதித்தாலும் ஸ்டார்ட் ஆகும். வேறு ஏதேனும் ஐடியா இருக்கா? கமெண்ட் செய்யுங்க.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ட்ரம்ப் விரைவில் சந்தித்து பேச உள்ளார். நவ.13இல் வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. பதவியில் இருந்து விலகும் அதிபர், புதிதாக பொறுப்பேற்க உள்ள அதிபரை சந்தித்து பேசுவது அமெரிக்க அரசியலில் இயல்பான நடைமுறையாக உள்ளது. அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கமாக இந்த சந்திப்பு அமையும் என்று கருதப்படுகிறது.
ஆசிய அளவில் மிகவும் பிரபலமான ஆக்ஷன் ஹீரோவாக இருப்பவர் டான் லீ. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பிரபாஸின் சலார் 2 போஸ்டரை வெளியிட்டு thums up emoji இட்டுள்ளார். சலார் 2 படம் ஷூட்டிங் துவங்கியுள்ள நிலையில், இப்படத்தில் டான் லீ நடிக்கவுள்ளாரா? என ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இருப்பினும், இதில் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் சிறார்களுக்கு எடுக்க வேண்டிய டிக்கெட் குறித்து IRCTC தெளிவாக குறிப்பிட்டுள்ளது. 5 வயது வரையிலான சிறார்களுக்கு டிக்கெட் எடுக்கத் தேவையில்லை என்றும், ஆனால் இருக்கை தேவையெனில் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 5-11 வயது சிறார்களுக்கு முழு BERTH தேவையெனில் கட்டணம் செலுத்த வேண்டும். முழு BERTH வேண்டாமெனில் பாதி கட்டணம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மொழிக்கலப்பும், இரட்டை அர்த்தம் இல்லாத பாடல்களை மட்டுமே எழுதுவேன் என்ற கொள்கையுடன் திரையுலகில் பயணிப்பவர் கவிஞர் தாமரை. இனியவளே படம் மூலம் பாடலாசிரியராக கோடம்பாக்கத்தில் வசீகரா என் நெஞ்சினிக்க, மல்லிகைப் பூவே போன்ற 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, பல விருதுகளை பெற்றுள்ளார். ஈழம் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளுக்காக எழுதுவதோடு நின்றுவிடாமல் களப்பணி ஆற்றிவரும் கவிதாயினிக்கு பிறந்தநாள் வாழ்த்து!
இளைஞர்கள் போதைப்பொருட்களை நாடுவதை தடுப்பதற்காக ‘போதையில்லா தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த தலைப்பில் ரீல்ஸ், மீம்ஸ், போஸ்டர் டிசைன் செய்யும் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவ.15-க்குள் போட்டியாளர்கள் தாங்கள் செய்த ரீல்ஸ் உள்ளிட்டவற்றை tndiprmediahub@gmail.com என்ற மெயிலில் அனுப்ப வேண்டும். வெற்றி பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத் தொகை அளிக்கும் PM Internship திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதற்கு https://pminternship.mca.gov.in. இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 21-24 ஆகும். +2, பட்டதாரி, டிப்ளமோ, ஐடிஐ ஆகியவை கல்வி தகுதியாகும். தேர்வு செய்யப்படுவோருக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் வங்கி, எரிசக்தி உள்ளிட்ட நிறுவனங்களில் Internships வழங்கப்படும்.
நாட்டின் முன்னணி தாெலைத் தொடர்பு நிறுவனமான JIO, ரூ.198 கட்டணத்தில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. அந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 14 நாள்கள் ஆகும். தினமும் 2 ஜிபி என மொத்தம் 14 நாள்களுக்கு 28 ஜிபி டேட்டா அளிக்கிறது. தினமும் 2 ஜிபி டேட்டா தீர்ந்ததும் குறைந்த வேகத்தில் அன்லிமிடேட் டேட்டா, 14 நாள்களும் அன்லிமிடெட் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றையும் JIO அளிக்கிறது.
விஜயபிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். இது குறித்து கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் பிரேமலதா கூறினார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விஜயபிரபாகரன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதில் நாம் அனைவரும் ரூபிக் கியூப்பை வைத்து விளையாடி இருப்போம். யோசிப்பதையும், நினைவாற்றலையும் அதிகப்படுத்தக்கூடிய மிகச்சிறந்த கருவியான ரூபிக் கியூப் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடம் 50 ஆண்டுகளை நினைவு செய்துள்ளது. 1974-ல் வடிவமைப்பு பேராசிரியரான எர்னோ ரூபிக் என்பவர் இதை கண்டுபிடித்தார். நீங்க இந்த கேம்மை விளையாடி இருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
Sorry, no posts matched your criteria.