India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செந்தூரில் தனியார்ப் பள்ளி மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டுப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் மாணவிகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பள்ளி முன்பு பெற்றோர் மறியல் போராட்டம் நடத்திய நிலையில், கோவையில் தலைமறைவாக இருந்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்று திருவாரூர் திருத்துறைப்பூண்டியின் நகராட்சி ஆணையராக துர்கா இன்று பதவியேற்றுள்ளார். மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய இவரது தந்தை சேகர், 1 ஆண்டுக்கு முன் காலமானார். இந்நிலையில், ஜூன் மாதம் வெளியான TNPSC தேர்வில் தேர்ச்சிப்பெற்று நகராட்சி ஆணையர் பதவியை தேர்ந்தெடுத்த துர்கா, இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீயை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாகையில் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் தங்களை தவெகவில் இணைத்துக்கொண்டார்கள். நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள, புதிதாக இணைந்தவர்களை நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
Prohibition writ என்பது கீழ் நீதிமன்றம், அரசு அலுவலர், தம் அதிகாரங்களுக்கு அப்பால் செயல்படுவதை தடுக்க பிறப்பிக்கப்படும் ‘இடைக்காலத் தடுப்பாணை’யை குறிக்கும். சட்டபூர்வமற்ற செயல்களை தடுக்க மாண்டமஸ் ரிட் வழங்கப்பட்டாலும், அதற்கு சரியான தீர்வு அளிக்காத, செயலற்ற நிலையில் இருக்கும் ஆணையர்களுக்கு எதிராக இம்மனுவை தாக்கல் செய்யலாம். இம்மனுவை ஐகோர்ட் & சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம்.
புஷ்பா-2 படத்தின் ட்ரெய்லர் வரும் 17ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அல்லு அர்ஜூன் நடிப்பில் செம்மரக் கடத்தல் பின்னணியில் எடுக்கப்பட்ட புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, 2ஆவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படம் வருகிற டிச. 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் ட்ரெய்லர் பீகார் தலைநகர் பாட்னாவில் வரும் 17ஆம் தேதி வெளியிட இருப்பதாக அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கு பயிலும் மாணவ – மாணவிகள் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதிகம் பேசுவதாகக் கூறி, ஒரு மாணவி மற்றும் 4 மாணவர்களின் வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு (75) இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ள அவர், சிகிச்சைப் பெற இடைக்கால ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ரூ.538 கோடி கடன் மோசடி வழக்கில், 2023 செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அவரை கைது செய்தது.
இந்தியாவின் மேற்கு முனையான கட்ச் முதல், கிழக்கு முனையான அருணாசலப் பிரதேசம் வரை, நாட்டின் அகலம் சுமார் 3000 கிமீ. அருணாசலில் சூரியன் உதித்த 2 hours-க்கு பின்னரே கட்ச்சில் சூரிய உதயம் தெரியும். இதனால், 1948 வரை நாட்டில் 3 நேர மண்டலங்கள் இருந்தன. பின்னர், ரயில்வே பயன்பாட்டுக்காக, மிர்ஸாபூரை மையமாக கொண்ட (82.3 தீ.ரேகை) ஒரே நேர மண்டலம் உருவானது. இதுவே தற்போது இந்தியாவில் திட்ட நேரமாக உள்ளது.
Skyscraper என்பதும், Tower என்பதும் அடிப்படையில் மிக உயரமான கட்டுமானத்தையே குறிக்கின்றன.
ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. Skyscraper என்பது மனிதர்கள் வாழ்வதற்காக எழுப்பப்படும் ஒரு கட்டடம். அது எக்கச்சக்கமான தளங்களைக் கொண்டிருக்கும். Tower என்பது மிக உயரமானதுதான் (அகலத்தோடு ஒப்பிடுகையில்), பொதுவாக இது மனிதர்கள் வசிப்பதற்காக எழுப்பப்படுவதில்லை. வேறு பல பயன்பாட்டிற்காக இது அமைக்கப்படும்.
Sorry, no posts matched your criteria.