News November 11, 2024
ஆங்கிலம் அறிவோம்: Skyscraper Vs Tower

Skyscraper என்பதும், Tower என்பதும் அடிப்படையில் மிக உயரமான கட்டுமானத்தையே குறிக்கின்றன.
ஆனால், இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. Skyscraper என்பது மனிதர்கள் வாழ்வதற்காக எழுப்பப்படும் ஒரு கட்டடம். அது எக்கச்சக்கமான தளங்களைக் கொண்டிருக்கும். Tower என்பது மிக உயரமானதுதான் (அகலத்தோடு ஒப்பிடுகையில்), பொதுவாக இது மனிதர்கள் வசிப்பதற்காக எழுப்பப்படுவதில்லை. வேறு பல பயன்பாட்டிற்காக இது அமைக்கப்படும்.
Similar News
News November 8, 2025
எளியோருக்கு அருமருந்தாகும் எருக்கு மூலிகை

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. ➤செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் ➤செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் ➤இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.
News November 8, 2025
இதுக்கெல்லாம் நான் வரமாட்டேன்: டிரம்ப்

தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என டிரம்ப் கூறியுள்ளார். இந்த மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடப்பது அவமானம் எனச் சாடிய அவர், பிரான்ஸ், ஜெர்மன் வம்சாவளியினர் அந்நாட்டில் கொல்லப்படுவது மோசமான ஒன்று எனவும் விமர்சித்துள்ளார். இதனால், US அதிகாரிகள் யாரும் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
News November 8, 2025
BREAKING: விலை 2 மடங்கு உயர்ந்தது

தமிழகம் – கேரளா இடையே <<18231577>>ஆம்னி பஸ்கள்<<>> இயக்கப்படாததால் விமானக் கட்டணம் இருமடங்கு அதிகரித்துள்ளது. சென்னை – கொச்சின் இடையே வழக்கமாக ₹3,500 ஆக இருந்த கட்டணம் ₹8,000 வரையிலும், சென்னை – திருவனந்தபுரம் இடையே ₹4,500 ஆக இருந்த கட்டணம் ₹9,000 வரையும் உயர்ந்துள்ளது. மதுரை – திருவனந்தபுரம் இடையே, ₹5,000 வரை இருந்த கட்டணம் ₹16,500 வரை உயர்ந்துள்ளது. சபரிமலை சீசன் என்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.


