India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டீசலுக்கு ‘என்ட்ரி டேக்ஸ் செஸ்’ என்ற கூடுதல் வரி விதிக்க TN அரசு பரிசீலிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்துக்கழகம் நாள்தோறும் ₹16 கோடி நஷ்டத்தை சந்திக்கிறது. இதனை ஈடுசெய்ய, கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக நிதித்துறை, வணிகவரி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். டீசலில் கலால் வரி வாயிலாக மத்திய அரசுக்கும், மதிப்பு கூட்டு வரி வாயிலாக மாநில அரசுக்கும் வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், முகவரி, தொகுதி, பாகம் உள்ளிட்டவற்றை திருத்த தேர்தல் ஆணையம் (EC) சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி நாளை, நாளை மறுநாள் மற்றும் வரும் 23, 24ஆம் தேதிகளில் உங்கள் அருகிலுள்ள வாக்குச்சாவடியில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாமுக்கு சென்று புகைப்படம், முகவரி சான்று நகல் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பித்தால் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். SHARE IT.
எம்ஜிஆர் பாணியை விஜய் பின்பற்ற பார்க்கிறார்; எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். மேலும், அண்ணாமலை லண்டனில் இருந்து திரும்பி வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என கிண்டலடித்த அவர், சர்வாதிகாரிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை, அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று சீமானையும் தாக்கியுள்ளார்.
* உங்களுக்கு முதலில் முதலை தெரிந்தால், நீங்கள் வாழ்க்கையை மேலோட்டமாக பார்ப்பவர். Practical-மனிதரும் கூட. உங்களுக்கு ரிஸ்க் எடுக்க தயக்கம் இருக்கும் * உங்களுக்கு படகு தெரிந்தால், சிறு சிறு விஷயங்களுக்குமே நீங்கள் கவனம் அளிப்பவராக இருப்பீர்கள். உங்களுக்கு Creative Thinking அதிகமாக இருக்கும். உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சது, கமெண்ட்ஸ்’ல சொல்லுங்க….
சட்டப்பேரவைத் தேர்தலின்போது சொத்து விவரங்களை குறைத்து தவறான தகவல் அளித்ததாக EX அ.தி.மு.க. அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் 2021 தேர்தலில் போட்டியிட்டது தொடர்பான மனுவை விசாரித்து ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின்படி EC விசாரித்து திருப்பத்தூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்டில் கோப்புகளை தாக்கல் செய்தது. இதில் 26ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
கறுப்பு அரிசி & பாசிப்பருப்பு ஆகியவற்றை சுத்தம் செய்து வெறுமென வறுத்து, மிக்சியில் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும். சர்க்கரையையும் தனியே பொடித்து கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவலை பொன்னிறமாக வறுக்கவும். அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலக்காய் பொடி, நெய் சேர்த்து நன்கு கிளறவும். அதை சிறு உருண்டைகளாக பிடித்தால் கறுப்பரிசி லட்டு ரெடி.
ஒட்டுமொத்த மளிகை விற்பனையில் 50%ஐ ஆன்லைன் வணிக நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ‘டேட்டம் இன்டெலிஜென்ஸ்’ நிறுவனம் நடத்திய ஆய்வில், 46% பேர் மட்டுமே அருகில் உள்ள கடைகளில் மளிகை வாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். க்விக் காமர்ஸ் விற்பனை மதிப்பு தற்போது ₹51,000 கோடியாக உள்ளது. இது அடுத்த 5 ஆண்டுகளில் ₹3.40 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ’கூலி’ படத்தில் நடிகர் ரஜினியின் மகளாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது பெற்றோர் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் மனம் திறந்து பேசியுள்ளார். அவர், ’எனது பெற்றோர் பிரிந்த போது நானும் அம்மாவுடன் மும்பைக்கு சென்றுவிட்டேன். அவர்கள் இருவரும் இன்னும் பிடிவாதமாக பிரிந்து வாழ்வது என்னையும் எனது தங்கை அக்ஷராவையும் பெரிய அளவில் பாதித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு ஹாஸ்பிடலில் வயிற்று வலியால் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் பாலாஜி மீதான தாக்குதலுக்கு எதிராக டாக்டர்கள் போராட்டத்திற்கு சென்றுவிட்டனர். இதனால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷுக்கு சிகிச்சையளிக்க டாக்டர்கள் யாரும் வரவில்லை. இதனால், அவர் உயிரிழந்தாக உறவினர்கள் கண்ணீர் மல்க கதறுகின்றனர்.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுர குமார திசநாயக்கின் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி அமோக வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில் NPP கூட்டணி 123 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. அதே நேரத்தில், சஜித் பிரேமதாசவின் SJB கூட்டணி 31, மகிந்த ராஜபக்சேவின் SLPP 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.