News November 20, 2024

BGT முதல் டெஸ்ட் : கோலி இடத்தில் இளம் வீரர்

image

BGT தொடரின் முதல் டெஸ்டில் KL ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படிக்கல், கோலி, பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்றும் தகவல் உள்ளது. 6-வது இடத்திற்கு சர்பராஸ் – ஜூரல் இடையே போட்டி நிலவுவதாகவும், ஆல்ரவுண்டர்களாக நிதிஷ், அஸ்வின் இடம் பெறலாம் எனப்படுகிறது. பந்து வீச்சாளர்களில் பும்ராவுடன் ஹர்ஷித் ராணா, சிராஜ்/ஆகாஷ்தீப் ஆகியோர் விளையாடலாம்.

News November 20, 2024

மீண்டும் ஒரு அணு ஆயுதம். தப்புமா பூமி?

image

80 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் மீது வீசப்பட்ட அணு ஆயுதங்களின் தாக்கம் இன்றளவும் பாதிப்பை தருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது அணு ஆயுதத்தை வீசுவோம் என ரஷ்யா எச்சரித்திருப்பது உலக நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. அமெரிக்கா தயாரித்த தொலைதூர ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் ஏவியதையடுத்து ரஷ்ய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால், பதற்றமான சூழல் நிலவுகிறது.

News November 20, 2024

கொட்டித் தீர்க்கும் மழை

image

திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பரவலாக மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

News November 20, 2024

யாராலும் எங்களை சேர்க்க முடியாது: ரஹ்மான் தம்பதி

image

ஏஆர் ரஹ்மான்-சாயிரா பானு தம்பதியர் பிரிவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், சில சிரமங்களும் பதற்றங்களும் தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் இணைக்க யாராலும் பாலமாக செயல்பட முடியாது. மிகுந்த வலியுடன் இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

News November 20, 2024

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்தால்….

image

காலையில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் ஏதேனும் நன்மைகள் உண்டா? என்று கேள்வி இருக்கலாம். அப்படி செய்வதன் மூலம், உடலில் கிளைகோஜன் அளவு குறையும் என்கிறார்கள். இதனால், கொழுப்பு வேகமாக கரைந்து, குளுக்கோஸை உறியப்பட்டு, வகை 2 நீரிழிவு நோயைக் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இது ஒரு முறையே தனி நபர் உடலை சார்ந்த விஷயம் உடற்பயிற்சி. அதற்கு முன்னர், உடலுக்கு உட்டச்சத்து என்பது முக்கியமான ஒன்று.

News November 20, 2024

மகளிர் ஹாக்கி: இறுதிப் போட்டியில் இந்திய அணி

image

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் ஜப்பான் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. முதல் அரையிறுதியில் மலேசிய அணியை வீழ்த்தி சீனா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா-சீனா புதன் கிழமை மோதவுள்ளன. லீக் சுற்றில் இந்திய அணி சீன அணியை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இன்று வாக்குப்பதிவு

image

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்க உள்ளது. இங்கும் ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேரடி போட்டியில் ஈடுபடுகின்றன. இதே போல 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று நடக்க உள்ளது. ஏற்கெனவே 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில், இன்று 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

News November 20, 2024

இந்த ஆண்டில் விவாகரத்து செய்த பிரபலங்கள்

image

சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனலாம். குறிப்பாக இந்த ஆண்டு மட்டுமே 3 முக்கிய பிரபலங்கள் விவகாரத்து முடிவை எடுத்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி, ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு உள்ளிட்டவர்கள் பிரிவை நோக்கி சென்றுள்ளனர். இதில் ஜி.வி.பிரகாஷ், ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

நியூசி.க்கு எதிரான தொடரை கைப்பற்றிய இலங்கை

image

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அதை தொடர்ந்து ஒருநாள் தொடரில் இலங்கை 2-0 எனக் முன்னிலையில் இருந்தது. நேற்று நடந்த 3ஆவது போட்டியில் நியூசி. 21 ஓவரில் 112/1 ரன்கள் எடுத்திருந்த மழை குறுக்கிட்டது. இதனையடுத்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

News November 20, 2024

நடுவானில் கோளாறு: உயிர் தப்பிய பயணிகள்

image

இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜெய்ப்பூரில் இருந்து டேராடூன் நகருக்கு இண்டிகோ விமானம் நேற்று இரவு புறப்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் அவசர அவரசமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

error: Content is protected !!