News November 20, 2024

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் இன்று வாக்குப்பதிவு

image

மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்க உள்ளது. இங்கும் ஆளும் மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் நேரடி போட்டியில் ஈடுபடுகின்றன. இதே போல 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் இன்று நடக்க உள்ளது. ஏற்கெனவே 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்த நிலையில், இன்று 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

Similar News

News December 8, 2025

தி.மலை: ரயிலில் முக்கிய பொருளை மிஸ் பண்ணிடீங்களா?

image

ரயிலில் பயணம் செய்யும் போது உங்கள் போன் அல்லது முக்கிய பொருட்கள் தொலைத்து விட்டீர்களா? கவலை வேண்டாம் இந்திய ரயில்வே 24×7 செயல்படும் ரயில் மடாட் (Rail Madad) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பயணிகள் Rail Madad மொபைல் <>செயலியில் <<>>PNR-யை உள்ளிட்டு, காணாமல் போன பொருட்களின் விவரங்களை பதிவு செய்யலாம். ஆப் பயன்படுத்த விரும்பாத பயணிகள் railmadad.indianrailways.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம். SHARE

News December 8, 2025

அமைச்சர் மீது CM நடவடிக்கை எடுக்கணும்: அண்ணாமலை

image

அமைச்சர் நேரு மேலும் ₹1020 கோடி மோசடி செய்திருப்பதாக <<18501393>>ED கூறியிருப்பது<<>> அதிர்ச்சியளிக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவில் பல ஊழல்கள் நடந்திருப்பது ஆதாரங்களோடு அம்பலமாகியிருப்பதாக கூறிய அவர், இந்த ஆட்சியில் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் துறைகளே சிறப்பாக செயல்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், மினிஸ்டர் மீது CM உடனடியாக FIR பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News December 8, 2025

SIR விவகாரம்: பார்லி.,யில் விவாதத்திற்கு வருகிறது

image

இந்திய அரசியலில் புயலை கிளப்பிவரும் SIR நடவடிக்கை குறித்து மக்களவையில் நாளை விவாதம் தொடங்கவுள்ளது. 10 மணி நேரம் நடக்கவுள்ள இந்த விவாதத்தை ராகுல் காந்தி தொடங்கவுள்ளார். அனைவரது விவாதங்களும் முன்வைக்கப்பட்ட பிறகு அதற்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளிப்பார். இங்கு இந்த விவாதம் முடிந்தபிறகு டிச.10-ம் தேதி மாநிலங்களவையில் மீண்டும் விவாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!