News November 20, 2024

இன்று மாலை EXIT POLL: வெற்றி யாருக்கு?

image

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், ஜார்கண்டில் இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்த EXIT POLL குறித்த தகவல்கள் உடனுக்குடன் பிரத்யேகமாக WAY2NEWS-இல் வெளியிடப்படும். தொடர்ந்து FOLLOW செய்யுங்கள்.

News November 20, 2024

தமிழக மீனவர்களுக்கு எதிராக திரும்பிய இலங்கை

image

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகளை கடற்படை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்ப்பாணத்தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் முதற்கட்டமாக இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு அரசின் முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இது தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

News November 20, 2024

Stock Market: பங்குச்சந்தையில் உள்ள பிரிவுகள்

image

இந்திய பங்குச்சந்தையில் பங்குகள் பல பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. பங்குச்சந்தையில் உள்ள பிரிவுகள்:- *வங்கி & நிதிச்சேவை *மருந்து & சுகாதாரம் *வாகனம் *ரியல் எஸ்டேட் *பெட்ரோலியம் & எரிசக்தி *உலோகங்கள் & சுரங்கத் தொழில் *FMCG *IT *தொலைத்தொடர்பு *மின்னணு சேவைகள். இவற்றில் தங்கள் துறை சார்ந்த விருப்பம், லாபம் & வளர்ச்சி விகிதத்தை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப முதலீட்டாளர்கள் பங்குகளைத் தேர்வு செய்யலாம்.

News November 20, 2024

நம்ம வீட்டுல விவாகரத்து நடந்த மாதிரி வலி

image

ஏ.ஆர்.ரஹ்மானின் அமைதியான சுபாவமும், குறும்பு பேச்சும் அவரை ‘‘நம்ம வீட்டு பையன்’ என்று உணர வைக்கும். அவர் தனது மனைவியை பிரிவதாக அறிவித்திருப்பது நமது வீட்டில் ஒருவருக்கு விவாகரத்து நடப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மற்ற சினிமாக்காரர்களின் விவாகரத்தை விட ரஹ்மானின் பிரிவு ரசிகர்களை அதிகமாக பாதித்திருப்பது சமூக வலைதள போஸ்ட்கள் மூலம் தெரிகிறது. நீங்க எப்படி ஃபீல் பண்றீங்க?

News November 20, 2024

ரயில்களில் ஜெனரல் கோச் அதிகரிப்பு

image

நாடு முழுவதும் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் 583 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்களில் தேவைக்கேற்ப கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பொது பெட்டிகளில் பயணிப்போருக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், அவர்களுக்கு அதிக வசதிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 20, 2024

5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சில மாவட்டங்களுக்கு லீவ் விட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

News November 20, 2024

PSU நிறுவனங்களின் டிவிடெண்ட் ரூல் மாற்றம்

image

பொதுத்துறை நிறுவனங்களுக்கான டிவிடெண்ட், பைபேக், ஸ்பிளிட், போனஸ் பங்கு வழங்குதல் போன்ற விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. அதன்படி, பொதுத்துறை நிறுவனங்கள் வரிக்கு பிந்தைய லாபத்தில் குறைந்தபட்சம் 30% அல்லது நிறுவனத்தின் நிகர மதிப்பில் 4%ஐ டிவிடெண்டாக வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு டிவிடெண்ட் மூலம் கூடுதல் வருவாய் தேவைப்படுவதால் இந்த விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

News November 20, 2024

13 மாவட்டங்களுக்கு கனமழை ALERT

image

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் காலையில் இருந்து மழை வெளுத்து வாங்கி வருவதால், அடுத்த 2 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

News November 20, 2024

சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் நீட்டிப்பு?

image

RBI கவர்னர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலத்தை 2ஆவது முறையாக நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 25ஆவது கவர்னராக 2018ஆம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகளில் பதவிக்காலம் நிறைவடைந்தாலும், கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில், அவரது பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

News November 20, 2024

‘பலவீனமான அத்தியாயம்’: AR ரஹ்மான் உருக்கம்

image

ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 30-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருந்தோம். ஆனால், எதிர்பார்க்காத முடிவு வந்துள்ளது. உடைந்த இதயங்களின் எடையால், இறைவனின் அரியணையே நடுநடுங்கிவிடும். சிதறிய துண்டுகள் சேராது என்ற போதிலும், அர்த்தம் காண விழைகிறோம். பலவீனமான அத்தியாயத்தில் நடைபோடும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிப்பவர்களுக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!