News November 21, 2024

எனக்கே ஆச்சரியமாதான் இருந்துச்சு..!

image

‘கோட்’ படத்தில் விஜய் பேசிய வசனம் குறித்து சிவகார்த்திகேயன் மனம் திறந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அந்த காட்சி பற்றி தனக்கு முன்பே தெரியாது எனவும், ஒரு நாள் முன்புதான் தனக்கு சீன் பேப்பர் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். “இதை பாத்துக்கோங்க, சுடக்கூடாது” என்றுதான் VP வசனம் எழுதி இருந்ததாகவும், ஆனால் “துப்பாக்கியை புடிங்க சிவா” என விஜய் பேசியது தனக்கே ஆச்சரியமாக இருந்ததாகவும் கூறினார்.

News November 21, 2024

குல்தீப் யாதவ் அறுவைசிகிச்சை வெற்றி

image

இந்திய சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிற்கு இடது இடுப்பில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க ஜெர்மனியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடிய பிறகு, அவர் சிகிச்சைக்காக சென்றுவிட்டார். சிகிச்சை முடிந்த புகைப்படங்களை குல்தீப் வெளியிட, அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். நடைபெறவுள்ள BGT தொடரிலும் குல்தீப் இடம் பெறவில்லை.

News November 21, 2024

ஆலோசனை கூட்டம் கூட்ட தயங்கும் சீமான்?

image

கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தைக் கூட்ட சீமான் தயங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடுவதால் நாதக பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருக்கும் நிர்வாகிகள் கட்சியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆலோசனை கூட்டத்தைக் கூட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 21, 2024

அதானிக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி

image

இந்திய தொழிலதிபர் அதானிக்கு நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ரூ.16,000 கோடி லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற, இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி அதானி சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரித்த நியூயார்க் நீதிமன்றம், அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

News November 21, 2024

பேராசிரியர்களுக்கு ‘செக்’ வைத்த தமிழக அரசு!

image

அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், சில பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் பணிக்கு தாமதமாக வருவதையும், அனுமதியின்றி வெளியே செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில், பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை உடனடியாக கொண்டு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2024

BGT தொடர் – இந்திய அணி பெரிய தவறு செய்துவிட்டது

image

BGT தொடருக்கு புஜாராவை தேர்வு செய்யாமல் BCCI தவறு செய்துவிட்டதாக ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். களத்தில் நீண்ட நேரம் பேட்டிங் செய்து ஆஸி. பந்துவீச்சாளர்களை புஜாரா சோர்வடையச் செய்திருப்பார் என்று கூறியுள்ளார். கடந்த காலங்களில் ஆஸி.க்கு எதிரான இந்திய அணி வெற்றியில் புஜாராவின் பங்கு முக்கியமானது என்றவர், அவர் இல்லாதது இந்திய அணிக்கே சிக்கல் என்றும் தெரிவித்தார்.

News November 21, 2024

சீனாவிலும் மாஸ் காட்டுவாரா ‘மகாராஜா’

image

சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்ட ‘மகாராஜா’ திரைப்படம் சீனா முழுவதும் 40,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், சீன வெர்ஷன் வரும் 29ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தமிழ் வெர்ஷன்போல சீன மொழியிலும் இப்படம் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News November 21, 2024

காலையில் சுறுசுறுப்பாக உணர…

image

சரியான நேரத்தில் படுக்க செல்வதுடன், படுக்கையில் இருந்து TV, போன் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம் * தூங்குவதற்கு முன், மனதில் இருக்கும் சங்கடங்களைத் தவிர்த்து, ஊக்குவிக்கும் சிந்தனையுடன் உறங்கலாம் * காலை அலாரத்தில் உற்சாக மூட்டும் பாடலை செட் செய்யுங்கள் * எழுந்தவுடன் காலைக் கடன்களை முடிப்பது உடலை உற்சாகப்படுத்தும் * உடற்பயிற்சி செய்து, குளிர்ந்த நீரில் குளிப்பது சோர்வை நீக்கி புத்துயிர்ச்சியூட்டும்.

News November 21, 2024

தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்?.. உண்மை என்ன

image

தமிழ்நாட்டில் புதிதாக கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு குடியரசு தினத்தன்று வெளியாகும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல். இது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மக்கள் இதை நம்ப வேண்டாம் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

News November 21, 2024

பாவங்களை போக்கும் சென்னிமலை ஆண்டவர்

image

சென்னிமலை முருகன் கோயில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு முருகன் 1749 அடி உயரத்தில் தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தபடி ஞான தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது என்று கூறுகின்றனர். பாவங்களை போக்கும் ஆலயமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது.

error: Content is protected !!