News November 21, 2024
தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்?.. உண்மை என்ன

தமிழ்நாட்டில் புதிதாக கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு குடியரசு தினத்தன்று வெளியாகும் எனவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல். இது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மக்கள் இதை நம்ப வேண்டாம் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
நீங்க இந்த சவாலுக்கு ரெடியா?

ஆபிஸ் டென்ஷன், டிராபிக் சத்தம், நகரங்களின் கூச்சல்- இரைச்சல் இன்றி, நம் மனதை வருடும் ஒரு பயணமாகவும் டிரெக்கிங் அமைகிறது. உங்களுக்கும் டிரெக்கிங் போகணும் என ஆசை இருந்தால் அதற்கு தமிழகத்திலேயே சில சிறந்த பெஸ்ட் ஸ்பாட்கள் உள்ளன. அவை எந்தெந்த இடம் என அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். உங்களுக்கு டிரெக்கிங் போன அனுபவம் உள்ளதா?
News November 14, 2025
NDA கூட்டணி ஊழல் அற்றது: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் களம் சூடுபறக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், தேர்தலுக்காக வாக்குறுதியை மட்டும் கொடுப்பதே திமுகவின் வாடிக்கை என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மக்களுக்காக எதையும் செய்யக்கூடிய, ஊழல் இல்லாததாக NDA கூட்டணி இருப்பதாகவும் குறிப்பிட்டார். மகளிர் உரிமைத்தொகையைக் கூட 2.5 ஆண்டுகள் கழித்தே திமுக அரசு வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.
News November 14, 2025
Bussiness 360°: IT நிறுவனங்களுக்கு 99 பைசாவில் நிலம்

*அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் சரிந்து ₹88.68 ஆனது. *இந்தியாவின் பாமாயில் இறக்குமதி 47% குறைந்து 75.6 லட்சம் டன்னாக சரிந்தது. *ஆயுள் காப்பீடு வணிகத்தில் மஹிந்திரா கால் பதிக்கிறது. *Accenture, Infosys நிறுவனங்களுக்கு ஆந்திராவில் 99 பைசாவில் நிலம். *111 நாடுகளுக்கான ஜவுளி ஏற்றுமதி 10% அதிகரிப்பு. *பாலியெஸ்டர் மூலப்பொருள்களுக்கான தரக்கட்டுப்பாடு நீக்கம்.


