India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் திடுக்கிடும் காரணங்கள் உள்ளதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. அதில், அதானி மீது குற்றச்சாட்டு எழுப்பி இந்திய பங்குச் சந்தையை சரியச் செய்வதும், அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் SBI & LIC ஆகிய நிறுவனங்களை சீர்குலைப்பதும் அமெரிக்க சதித் திட்டத்தின் முக்கிய நோக்கம் எனக் கூறியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெறும் 5 நாட்களில் சவரனுக்கு ₹2,320 உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது. 17ஆம் தேதி ₹55,480க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று ₹57,800க்கு விற்கப்படுகிறது. அன்று ₹6,935ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், இன்று ₹7,225க்கு விற்பனையாகிறது. உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக இருக்கும் தங்கத்தின் விலை இப்படி உயர்வது அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.
BGT முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷனின் முடிவில் இந்தியா 51/4 எடுத்து தடுமாறி வருகிறது.ஜெய்ஸ்வால்(0), படிக்கல் (0), கோலி (5), ராகுல் (26) அடுத்தடுத்து வெளியேறினார்கள். களத்தில் பண்ட் (10), ஜூரேல் (4) இருக்கிறார்கள். ஆஸி. தரப்பில் ஸ்டார்க், ஹேசில்வுட் இருவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
மேற்கு வங்கம் பங்குரா அரசு ஹாஸ்பிட்டல் கழிவறையில் குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்விச் சென்றது. கடந்த 18ம் தேதி நிகழ்ந்த சம்பவத்தின் போட்டோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் அளித்தும் ஹாஸ்பிட்டல் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கர்ப்பிணியின் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்திற்கு பாஜக மாஜி அமைச்சர் பிரதிமா பூமிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
1) ரசவாதம் என்றால் என்ன? 2) MISA என்பதன் விரிவாக்கம் என்ன? 3) பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர் யார்? 4) நிலவின் ஒளி பிரதிபலிப்பு பூமியை வந்தடைய எடுக்கும் நேரம் எவ்வளவு? 5) கம்பன் யார்? நூலின் ஆசிரியர் யார்? 6) கடல் பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிய உதவும் கருவி எது? 7) பஞ்சாயத்து ராஜ் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ₹640 உயர்ந்து அதிர்ச்சியளித்துள்ளது. நேற்று ₹57,160க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹57,800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ₹7,145க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரே நாளில் ₹80 உயர்ந்து ₹7,225க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ஒன்று ₹101க்கு விற்கப்படுகிறது.
உக்ரைன் – ரஷ்யா போரில், ரஷ்யா மீது தாக்குதல் நடத்த ஏவுகணை உதவிகளை வழங்கும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த, தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்குவதாக புடின் குறிப்பிட்டுள்ளார். இந்த செயல் இரு நாடுகளுக்கு இடையேயான போரை உலகப் போராக மாற்றும் முயற்சி என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் குறித்து நீதியரசர்கள் ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை செந்தில் பாலாஜி திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
2025ஆம் ஆண்டுக்கான IPL தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மே 25ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் தொடர் நிறைவடையவுள்ளது. முழு அட்டவணை விரைவில் வெளியிடப்படவுள்ளது. 2026 ஐபிஎல் தொடர் மார்ச் 15 முதல் மே 31 வரை நடைபெறும் என்றும், 2027 ஐபிஎல் தொடர் மார்ச் 14 முதல் மே 30 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 26ஆம் தேதி தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகவிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதன் தாக்கத்தினால், 25 மற்றும் 27ஆம் தேதிகளில் கனமழையும், 26ஆம் தேதி அதி கனமழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.