India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதானியை பற்றி யாரும் பேசவே கூடாது என பாஜக நினைப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குறை கூறியுள்ளார். மோடியை விமர்சித்து பேசினால் கூட அமைதியாக இருக்கும் பாஜகவினர், அதானி பெயரை உச்சரித்தால் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். பாஜகவின் தவறுகளை சுட்டிக்காட்டினால் பொய் வழக்கு போடுவதை பாஜக குறிக்கோளாக வைத்துள்ளதாகவும் அவர் சாடினார்.
நாடு முழுவதும் இந்த மாத இறுதிக்குள் 370 ரயில்களில் 1,000 முன்பதிவில்லா பொது பெட்டிகளை இணைக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அந்த வரிசையில் தெற்கு ரயில்வேயால் 51 ரயில்களில் பெட்டிகளை இணைக்கும் பணி நடைபெறுகிறது. இதில் இதுவரை சென்னை-தூத்துக்குடி, சென்னை-டெல்லி, குமரி- ஹவுரா உள்ளிட்ட 27 விரைவு ரயில்களில் 79 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால் 5,600 பேர் கூடுதலாக பயணிக்க முடியும்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் கருத்துக்கணிப்புகள் பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. இருமாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கவுள்ள நிலையில், அங்கு பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருந்தது. கடந்த முறை ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கணிப்புகள் வெளியான நிலையில், அங்கு பாஜக ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 250/5 ரன்கள் எடுத்துள்ளது. ஆன்டிகுவாவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய WI அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் மைக்கேல் லூயிஸ் 97, கவெம் ஹோட்ஜ் 90 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
மகாராஷ்டிரா தேர்தலில் INDIA கூட்டணி வெற்றி பெறும் என ராஜஸ்தான் CONG தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொய்யாக்குவோம் என்ற அவர், மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி அமைவதை பாஜகவால் தடுக்க முடியாது என்றார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியுடன், பிரியங்கா காந்தி இணைந்து பா.ஜ.க.வுக்கு தூக்கத்தை கெடுப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1956 – அரியலூரில் நடந்த ரயில் விபத்தில் 142 பயணிகள் உயிரிழந்தனர்,
1980 – இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 4,800 பேர் உயிரிழந்தனர்.
2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2003 – திமுக மூத்த தலைவர் முரசொலி மாறன் மறைந்தார்.
டெல்லி முதல்வர் அதிஷியை, அம்மாநில துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பாராட்டியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி பெண்கள் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அதிஷியும், வி.கே.சக்சேனாவும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அவர், இதற்கு முன்பு இருந்தவரை விட அதிஷி ஆயிரம் மடங்கு மேலானவர் என்று கெஜ்ரிவாலை மறைமுகமாக அவர் விமர்சித்தார்.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் சில மணி நேரங்களில் எண்ணப்படவுள்ளன. மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. இந்திய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தேர்தல் முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள வேண்டுமா? WAY2NEWSஇல் இணைந்திருங்கள்.
சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் சாத்விக் – சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் சாத்விக்- சிராக் ஜோடி, டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஸ்காரப் மற்றும் கிம் அஸ்ட்ரூப் ஜோடியுடன் மோதியது. தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய சாத்விக் – சிராக் ஜோடி 21-16, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு போதுமான அளவு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு இதுவரை வழங்கப்படவில்லை என ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், துவரம் பருப்பு போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். சரியான தகவலை தெரிந்துகொண்டு ராமதாஸ் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.