News November 30, 2024

என்ன ஸ்பீடு: அதுக்குள்ள போஸ்டரா?

image

தொடர் கனமழை காரணமாக, சென்னையின் மழை வெள்ள பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் திண்டாடி வரும் சூழலில், நகரின் பல பகுதிகளில் “Monsoon is where, CM son is there” என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது தற்போது தான் அடிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால், ட்ரெண்ட் ஆகிவிட்டது. அதற்குள் எங்கிருந்துதான் அடித்தார்கள். இவங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?

News November 30, 2024

கனமழை: வைரலாகும் மீம்ஸ்

image

சென்னையில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல், மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், சென்னை மழையை வைத்து ஒரு மீம்ஸ் வைரலாகி வருகிறது. சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பேனரை சுட்டிக்காட்டி, எனக்கு நீச்சல் தெரியாது என வெளிமாவட்ட மக்கள் கூறுவது போல் அந்த மீம்ஸ் இடம்பெற்றுள்ளது.

News November 30, 2024

புஷ்பா-2: இன்னும் சற்று நேரத்தில் டிக்கெட் புக்கிங்

image

அல்லு அர்ஜூன், பகத் பாசில், ரஷ்மிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா-2’ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வரும் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு ஆந்திராவில் முதல்நாள் நள்ளிரவு காட்சிகளுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ₹500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

News November 30, 2024

TET தேறிய ஆசிரியர்களுக்கு விரைவில் பணி

image

டெட் தேர்வில் தேர்ச்சியடைந்த ஆசிரியர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சியில் பேட்டியளித்த அவர், பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களின் தேவை அதிகமாக உள்ளது என்றார். மேலும், பகுதிநேர ஆசிரியர்களை முழு நேர ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை, CM ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டுசென்று நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்தார்.

News November 30, 2024

சொதப்பிய 13வயது சிறுவன்; தடுமாற்றத்தில் இந்திய அணி

image

UAEஇல் நடைபெற்று வரும் PAK அணிக்கு எதிரான U19 போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 13வயது IND வீரர் வைபவ் சூர்யவன்ஷி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அலி ராசா வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஐபிஎல்லில் RR அணியால் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டதால், அவரின் அதிரடி ஆட்டத்தைக் காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது வரை 22 ஓவர்களில் IND 84/4 ரன்கள் எடுத்துள்ளது.

News November 30, 2024

மழைநீர் வடிகால் பணிகள் போட்டோஷூட்

image

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திமுக அரசின் வெற்று போட்டோஷூட்டுகள் என்பதை இன்றைய மழை அம்பலப்படுத்தியுள்ளதாக இபிஎஸ் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஃபெஞ்சல் புயல் குறித்து வானிலை மையம் கொடுக்கும் தகவல்களை பெற்று மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

News November 30, 2024

சீனாவில் மகாராஜா.. கோடிகளில் வசூல்

image

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக சீன மொழியில் நேற்று ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், முதல் நாள் மட்டும் ₹5 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சீனர்களுக்கும் படம் பிடித்துள்ளதால் வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. உங்களுக்கு இந்த படம் பிடித்ததா? Cmt Here.

News November 30, 2024

கருணாநிதி வீட்டை வெள்ளம் சூழ்ந்தது

image

ஃபெஞ்சல் புயலால், தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு முன்னாள் CM கருணாநிதி வீடும் தப்பிக்கவில்லை. நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், சென்னையில் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் கோபாலபுரத்தில் பெருக்கெடுத்த வெள்ளநீர், கருணாநிதி இல்லத்தை சூழ்ந்தது. முன்னதாக, சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இந்த போட்டோ வைரலாகிறது.

News November 30, 2024

சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல்

image

சென்னையில் இருந்து தென்கிழக்கே 100 கி.மீ. தொலைவில் ஃபெஞ்சல் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், புதுச்சேரியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டிருப்பதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.

News November 30, 2024

13 கி.மீ. டூ 10 கி.மீ…. வேகம் குறைந்தது புயல்

image

ஃபெஞ்சல் புயல் நகரும் வேகம் குறைந்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் இன்று மாலை காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் மணிக்கு 70 கி.மீ. -80 கி.மீ. வரையும், இடையே 90 கி.மீ. வரை காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் நகரும் வேகம் தற்போது 13 கி.மீ.யில் இருந்து 10 கி.மீ. ஆக குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!