India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (டிச.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்கு உரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்டர்நெட்டில் கொட்டிக்கிடக்கும் தகவல்களில் எதை பார்க்கிறோம் என்றே தெரியாமல் Scroll செய்வதால் ஏற்படும் நெகட்டிவ் விளைவுகளை குறிக்கும் வார்த்தையே Brain Rot. இந்த ஆண்டுக்கான Oxford Word of the Year இதுதான். மலிவான இன்டர்நெட் கன்டன்ட்களால் மனித உளவியல் மற்றும் அறிவாற்றலில் ஏற்படும் விளைவுகளை இந்த வார்த்தை குறிக்கிறது. சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படும் சிக்கல் என்ன? கமெண்ட் பண்ணுங்க
மக்கள்தொகை பெருக்கத்தோடு மற்ற நாடுகள் போராடும் வேளையில், தென்கொரியா மட்டும் பிறப்பு விகிதம் குறைவதால் திணறி வருகிறது. 3 குழந்தை பெற்றால் கட்டாய ராணுவ சேவை விலக்கு, சைல்ட்கேர் மானியம், வரி விலக்கு என அரசு அறிவித்தும் பிறப்பு விகிதம் உயரவில்லை. இது தொடர்ந்தால் இந்த நூற்றாண்டுக்குள் தற்போது 5.2 கோடியாக உள்ள மக்கள்தொகை 1.4 கோடிக்கு கீழ் குறையும் அபாயம் உள்ளதாம். கொஞ்சம் மனசு வைங்க கொரிய லேடீஸ்!
➤மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – பக்தி ➤மிதுனம் – வெற்றி ➤கடகம் – சுகம் ➤சிம்மம் – பயம் ➤கன்னி – பாராட்டு ➤துலாம் – குழப்பம் ➤விருச்சிகம் – பயணம் ➤தனுசு – அமைதி ➤மகரம் – விவேகம் ➤கும்பம் – அன்பு ➤மீனம் – சிரமம்.
சீரியல்களில் நடித்து வந்த பிரபல நடிகர் நேத்ரன் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கனா காணும் காலங்கள் சீசன் 2, ரஞ்சிதமே, பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களில் அவர் நடித்து வந்தார். இவரது மறைவால் சின்னத்திரை உலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.
காற்று மாசுபாடு புறச்சுழல் பிரச்சனை என்பதை தாண்டி தனிநபர் உடல்நலனை பாதிப்பதாக மாறியுள்ளது. காற்று மாசுக்கள் ஹார்மோன் சமநிலையை குலைக்கின்றன. இயற்கையாக கருவுறும் வாய்ப்புகளை தடுப்பதோடு IVF, IUI போன்ற செயற்கை கருத்தரித்தலிலும் சிக்கல் உண்டாக்குவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புகை பிடிப்பதை தவிர்த்தல், ஆர்கானிக் உணவு, உடற்பயிற்சி, மாஸ்க் அணிதல் மூலமாக உடலின் தற்காப்பை அதிகரிக்கலாம்.
லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 10 வயது சிறுவன் கிரிஷ் அரூரா. இவர் மென்சா நடத்திய IQ தேர்வில் 162 ஸ்கோர் செய்து உலகின் 1% அதிகூர்மையானவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். செஸ் விளையாட்டில், கற்றுக்கொண்ட 4 மாதங்களில் தனது ஆசிரியரை தோற்கடித்த கிரிஷ், 4 வயதிலேயே சிக்கலான கணித சமன்பாடுகளுக்கு சரியாக பதிலளித்துள்ளாராம். ஐன்ஸ்டீனின் IQ 160 என கணிக்கப்படுகிறது. சைல்ட் ப்ரோடிஜி!
மக்களவையில் வங்கி சட்டங்கள் ( திருத்தம்) மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் 19 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு வங்கி A/Cக்கு 4 நாமினிகளை நியமிக்கலாம். அறிக்கையிடல் காலக்கெடு வங்கிகளில் முழுநேர இயக்குநர்களின் பதவிக்காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். தணிக்கையாளர்களுக்கான ஊதியத்தை வங்கி நிர்வாகங்களே முடிவு செய்யலாம்.
லலிதா என்கிற மூதாட்டி பீகார் ஜனக்பூர் ராமர் கோயில் வாசலில் சில ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் அருகிலிருப்பவரிடம் தன் பையை கொடுத்துள்ளார். அவர் குப்பை தொட்டியில் போட போனபோது அங்கிருந்தவர்கள் கவனிக்கவே பையில் பணம் இருப்பது தெரிந்துள்ளது. கிழிந்த பையில் மொத்தமாக ரூ.3 லட்சம் இருந்தது. இந்த பணம் மூதாட்டியின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என சக துறவிகள் கூறினர்.
புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா ஆனது. புனேவில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளுமே தொடக்க முதல் சிறப்பாக விளையாடின. இதனால் இந்த ஆட்டம் 34-34 என்ற புள்ளிக்கணக்கில் சமனிலையில் முடிந்தது. இந்த தொடரில் 12 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், ஹரியானா அணி 61 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.